ரன் லோலா ரன் (1998)

 சக்திடாக்கீஸ்


World Cinema


ரன் லோலா ரன் (1998) - (German)


சிறிய கிரிமினலான லோலாவின் காதலன் மானி தனது பாஸிடம் சேர்க்க வேணடிய 100000 மார்க் கை மெட்ரோ ரயிலில் சந்தர்ப்ப சூழ்நிலையால் இழந்து விடுகிறான். அது ஒரு பிச்சைக்காரன் கைக்கு சென்று விடுகிறது. பணத்தை பறிகொடுத்த மானி அவன் காதலி  லோலாவுக்கு போன் செய்து தனக்கு 20 நிமிடமே நேரம் இருப்பதாகவும் பாஸுக்கு பணம் கொடுக்க தனக்கு உதவுமாறும்  வேண்டுகிறான். அவள் உதவவில்லை என்றால் எதிரே இருக்கும் சூப்பர் மார்கெட்டில் கொள்ளை அடிப்பது தவிர தனக்கு வேறு வழியில்லை என்கிறான்.

இந்த தொலைபேசி உரையாடல் வழியே சூடுபிடிக்கத் தொடங்குகிறது படம். 

 ~

சூப்பர் மார்கெட் கொள்ளையில் அவனை ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு வங்கி அதிகாரியான தனது தந்தையிடம் பணம் பெற்று  தான் 20 நிமிடத்தில் அவன் இருக்குமிடம் வருவதாக கூறி தொலைபேசியை வைத்துவிட்டு தனது ஓட்டத்தை துவக்குகிறாள் லோலா.

~

இதன் பிறகு தான் படமே.

ஃபிளாஷ்பேக் இதுவரை பார்த்திருக்கிறோம். ஃபிளாஷ் பார்வேர்ட் முறையில் படம் இதன் பின் சொல்லப்படுகிறது. 

இது ஒரு வித்தியாசமான படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கிறது.

~

20 நிமிடங்களுக்குள் முடியாமல் சில நிமிடங்கள் தாமதமாக பணம் இல்லாமல் காதலன் இருக்கும் இடம் சேரும் போது என்ன நடக்கும்.., 

20 நிமிடங்களுக்கு முன் காதலன் கேட்கும் பணத்துடன் சென்று சேரும் போது என்ன நடக்கும்...,

சரியாக 20 நிமிடங்களில் பணத்துடன் சென்று சேரும் போது என்ன நடக்கும் ..... ?

~

இதைத் தான் படம் விறுவிறுவென்று லோலாவின் ஓட்டத்துடன் சொல்கிறது. சுறுசுறு  திரைக்கதையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார இயக்குநர் டாம் டைக்வர்.

விறுவிறு கதைக்கேற்ற தட தட  பின்னணி இசை. இரண்டும் இணைந்து கலந்து நம்மை இறுதிவரை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கிறது.

~

படம் பார்த்து முடித்த பின்பும் கூட ஏதோ லோலா வுடன் சேர்ந்து நாமும் ஓடுவது போலவே உணர்வு கண்டிப்பாக ஏற்படும்.

எனக்கு ஏற்பட்டது. 🙂

~

படம் பார்த்தவர்கள் பாக்கியவான்கள். பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவும்.

~

இந்த இன்ஸ்பிரேஷனில் 12b என்றொரு தமிழ்ப்படம் வந்தது. நம் ரசிகர்களுக்கு Flash forward அனுபவத்தை எளிமையாகப் புரிய வைக்கத் தவறிவிட்டது அப்படம். 

~

சமீபத்தில் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் கூட இந்தப் படத்தின் தழுவல் என்றொரு தகவல் கிடைத்தது.

Comments