சினிமா - P S 2 (எ) பொன்னியின் செல்வன் 2 (2023)
சினிமா
P S 2 (எ) பொன்னியின் செல்வன் 2 (2023)
சுஜாதாவின் ப்ரியா, கரையெல்லாம் செண்பகப்பூ முதலான சில கதைகளை சினிமாவாக பார்த்து நொந்திருக்கிறேன்.
தி.ஜா. வின் மோகமுள் பார்த்து மனசு உடைந்து போயிருக்கிறேன். என்ன தான் தேசிய விருதெல்லாம் வாங்கினாலும் கதை படிக்கும்போது கூடவே இழைந்து வந்து கொண்டிருந்த நெகிழ்ச்சி படத்தில் டோட்டல் மிஸ்ஸிங்.
புதுமைபித்தனின் சிற்றன்னை தான் இதுவரை சினிமாவாக ஆக்கப்பட்டதிலேயே சிறந்த முறையில் படமாக்கப்பட்ட ஒரே கதை. ஆல் க்ரெடிட் கோஸ் டூ மகேந்திரன்.
~
இனி பொ.செ.2 :
முதல் பகுதியை ஒரு ஆர்வத்தில் தியேட்டரில் பார்க்க முடிந்த என்னால் இரண்டாம் பகுதியை ஓடிடி யில் பார்க்கவே ரொம்ப நாளாக தோணவேயில்லை.
கொஞ்சமும் ஒட்டாத லொகேஷன்கள்.
அடிக்கடி ஜம்ப் அடிக்கும் திரைக்கதை.
ஓவர் ஆக்டிங் விக்ரம்.
கம்பீரம் இல்லாத ஜெயம் ரவி. வெக்கேஷனில் வெளி நாட்டில் பஜார்களை வேடிக்கை பார்க்கும் முக எக்ஸ்பிரஷன்ஸ் த்ரிஷா.
மருந்துக்கும் சிரிப்பு வராத ஆழ்வார்க்கடியான் ஜெயராமின் காமெடி.
சரத்குமாரைத் தவிர மற்ற சீனியர்ஸ் எல்லாம் ஜுனியர் ஆர்டிஸ்டுகள் லெவலுக்கு தான் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் மட்டுமே கொஞ்சம் ஆறுதல்.
கதையின் ஜீவனான ஆதித்த கரிகாலனின் மரணம் லேசான துணுக்குறுதலை கூட ஏற்படுத்தவில்லை.
யாருமே சோபிக்காத இடத்தில் ஏ ஆர் ஆர் மட்டுமே சோபித்திருக்கிறார். பாடல்கள் அருமை. பின்னணி இசை அந்த அருமை அளவிற்கு இல்லை. ஆனாலும் பரவாயில்லை.
க்ளைமாக்ஸில் வரும் போர்க்கள காட்சிகளெல்லாம் செம காமெடி.
பொ.செ 1 மற்றும் பொ.செ. 2 எல்லாம் மணி சாரின் பம்மாத்துகள்.
பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.
~
பிகு: அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதையை மீண்டும் படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.



Comments
Post a Comment