#Happy_Fathers_Day - 18th June 2023

 #Happy_Fathers_Day

ன்று காலை முதலே வாட்ஸப் ஸ்டேடஸ்களிலும் காலைவணக்க போஸ்ட்டுகளிலும் பேஸ்புக் ஸ்டோரி, கவர் பிக்சர், ஸ்டேடஸ் என எல்லா வழிகளிலும் வாழ்த்துகள் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன.


பல வாழ்த்துகள் பார்மலாகவும், சில அர்த்தம் பொதிந்தவைகளாகவும் இருந்தன.


சுஜாதா வாசகர் குழுவில் வந்திருந்த தந்தை பற்றிய சுஜாதாவின் 'எல்டோரேடா' கதை ஒரு தந்தை மகன் மீது காட்டிய பாசத்தின் விளிம்பு வரை என்னை இட்டுச்சென்றது. கதையின் முடிவு பொயட்டிக்.


அதனால் தான் அவர் வாத்தியார்.


ஆனால் இவை எல்லாவற்றையும் விட இதோ இப்போது பார்த்த இந்த படம் என்னை நெகிழ வைத்துவிட்டது.


The Elephant Whisperers - அருமையான காவியம்.


பார்க்காதவர்கள் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பார்க்கவும்.


ஏனோ தெரியவில்லை இன்று காலை ஆரம்பிக்கும்போதே நெகிழ்ந்த மனது இப்போது வரை நார்மலாகவே இல்லை.


மனம் என்றால் நெகிழ்ச்சி இருக்கவேண்டும். அப்போது தான் மனிதம் அந்த மனதில் இருக்கும்.


நண்பர்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.


பிகு:

வாழ்த்து வெளியிட்ட 'Sweet Karam Coffee’ ப்ராடட்கள் ரொம்ப சுமாராகவே தான் இருக்கின்றன

Comments