வாழ்த்து கோகுலாஷ்டமி

வாழ்த்து


கோகுலாஷ்டமி 



"வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே.”

(சிலம்பு - ஆச்சி குரவை படலம்)

“முன்பொருநாள் வாசுகியை கயிறாகக் கொண்டு பாற்கடலை கடைந்தாய். ஆனால் கண்ணனாக அவதரித்த போது யசோதை உரலோடு உன்னை இணைத்துக் கட்டிய போது ஒன்றுமே சொல்லாமல் அவள் தாய்மை அன்புக்கு கட்டுப்பட்டாய்.

உன்னுடைய இந்த செயல் எங்கள் மனங்களை மயக்குகிறது”
❤

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்

பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

""எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன்""
~

வா.. கண்ணா.. வா..
வெகு சீக்கிரமாய் வா... 🙏🙏🙏
~

சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி தின நல்வாழ்த்துகள்



Comments