சினிமா - விடுதலை
சினிமா
விடுதலை எல்லாம் என் லிஸ்ட்டுலேயே இல்லாத படம். பார்க்கணும் என்று தோன்றியதே இல்லை.
பொதுவாக வெற்றி மாறன் படங்கள் எல்லாம் ஓவர் ரேட்டட் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.
சிலபல டெக்னிகல் விஷயங்களில் அவர் கில்லாடி. அதனாலேயே மற்றவற்றில் எவ்வளவு பிழை/குறை இருந்தாலும் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை.
இந்நிலையில், Facebook வீடியோக்களை நோண்டிக் கொண்டிருக்கையில் #ramcharan #south #superhit என்ற ஹேஷ்டாகில் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். நம்ம பரோட்டா சூரி ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அட நம்ம விடுதலை தான் . ஹிந்தி டப்பிங்.
சூரி தான் ராம்சரண் போல அவர்களுக்கு. அட ராமா ... கெரகத்த.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முழு படத்தையும் சில Facebook விடீயோக்களிலேயே பார்த்து ஒருவழியாக முடித்தேன்.
Facebook ல் நான் முழுவதும் பார்த்த ஒரே படம் அண்ட் முழு படம் இது தான்.
சேத்தன் பேசும் கெட்ட வார்த்தைகள் மட்டும் சூப்பராக் தமிழிலேயே வருகிறது. சரியான ஹிந்தி ட்ரான்ஸ்லேட்டர் கிடைக்கவில்லை போலும்.
சரி, படம் எப்படி ?
ஆரம்பத்திலேயே சொன்னேனே அதே தான்.
ஓவர் ரேடட்.
நல்லவேளை புலவர் கலியபெருமாள் இதையெல்லாம் பார்க்காமல் போய் சேர்ந்துவிட்டார்.
வீரவணக்கம் போட்டு மொபைலை ஸ்விச் ஆப் செய்தேன்.
சார்ஜ் சுத்தமா அவுட். எனக்கும் தான்.



Comments
Post a Comment