நன்றி

நன்றி



23.10.2021 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை நடுநிலை அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மாநில இலக்கிய அணி செயலராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


பல ஜாம்பவான்கள் வீற்றிருந்த அவையில் என்னை கௌரவப்படுத்தி என் மீது நம்பிக்கை வைத்து பணி செய்ய வாய்ப்பளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

என்னுடன் சேர்ந்து புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாநில பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது பெரு நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள எனக்கு உற்சாகமளித்து ஊக்கம் ஊட்டிய மாநில தலைவர் என் பாசத்திற்குரிய அண்ணன் திரு கணேசன் அவர்களுக்கு மிக்க நன்றி.


Comments