வரலாறு

வரலாறு 

சாதவாகனர்கள் 


மௌரியப் பேரரசின் எழுச்சி வேறு பல சாம்ராஜ்ய கனவுகளுக்கு வித்திட்டுக் கொண்டேயிருந்தது.

மௌரியர்களின் வீழ்ச்சிக்கு பின்பு இன்றைய மஹாராஷ்டிரா, சௌராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்னாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒரிஸா ஆகியவைகளை உள்ளடக்கி 'சாதவாகனப் பேரரசு' கம்பீரமாக எழுந்து நின்றது.

கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முடிய இவர்கள் பேரரசு அசைக்க முடியாத வலிமையுடன் திகழ்ந்தது.

அமராவதியை தலை நகரமாக கொண்டு ஆண்ட சாதவாகனர்கள் தம்மை 'ஆந்திரர்கள்' என்று அழைத்துக் கொண்டனர். இவர்களின் காலத்தில் பிராகிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆட்சி மொழியாக இருந்திருக்கிறது.

சாதவாகனர்களின் ஆட்சியில் தான் உலோக நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சிந்து வெளி முதல் குமரி முனை வரை வாணிபம் செய்து வலிமையான கலாசார பாலத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

பெரும்பாலும் வேத நெறி சமயங்களை பின்பற்றிய சாதவாகனர்கள் பௌத்தத்தையும் ஆதரித்தனர்.

மெகஸ்தனிசின் குறிப்புகளின்படி சாதவாகனர்களிடம் ஒரு லட்சம் காலாட்படையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் அடங்கிய யானைப்படையும், நன்கு வலுவாக கட்டியமைக்கப்பட்ட 30 கோட்டைகளும் இருந்ததாக தெரிகிறது.

சிமுகன் முதல் ஹரிபுத்திர சதகர்ணி முடிய 15 க்கும் மேற்பட்ட சாதவாகன மன்னர்கள் தொடர்ச்சியாக இப்பேரரசை கட்டி ஆண்டாலும் அவர்களில் மிகச்சிறப்பான பேரரசன் 'கௌதமிபுத்ர சதகர்ணி' ஆவார்.

கௌதமிபுத்திரர் சாதவாகன பேரரசை பெரிய அளவில் விஸ்தரித்தார். கிரேக்கர்கள், சகர்கள், பகலவர்கள் ஆகியோர்களின் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்து சாதவாகனப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்தினார்.

இவ்வெற்றிகளை கொண்டாடும் வண்ணம் இரண்டுமுறை அஸ்வமேத யாகங்கள் நடத்தினார் கௌதமிபுத்திரர்.

சாதவாகனர்களின் தென் எல்லை அப்போது காஞ்சிபுரம் ஆக இருந்தது.

இன்றும் அலுவல் ரீதியில் பின்பற்றப்படும் சாலிவாகன ஆண்டு அல்லது சக வருஷம் என்று குறிப்பிடப்படும் இந்திய தேசிய நாட்காட்டியை உருவாக்கியவர் கௌதமி புத்திர சதகர்ணி தான்.

கௌதமிபுத்திரருக்கு பின் சாதவாகன பேரரசு மெல்ல மெல்ல வலுக்குறைய ஆரம்பித்தது. சாதவாகர்களின் பிராந்திய சத்ரபதிகளாக இருந்தவர்கள் தங்கள் பகுதிகளை பேரரசில் இருந்து விடுவித்துக் கொண்டு சுயாதீன அரசாக தங்களை அறிவித்துக் கொண்டனர்.

சாதவாகனர்களைப் பற்றிய ஆச்சரியமான விஷயம் ஒன்று உண்டு.

தென் மற்றும் மத்திய பாரதத்தில் மிகப்பெரிய பேரரசை உருவாக்கி ஆட்சி செய்த சாதவாகனர்கள் அடிப்படையில் பிராமணர்கள்.
~

பி.கு:
நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து 2017ல் வெளிவந்த 'கௌதமிபுத்ர சதகர்ணி' தெலுங்கில் வசூலை குவித்த மாபெரும் வெற்றி படம்.

பாரதத்தை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்க முயன்ற ஆந்திரரின் பெருமையான வரலாறு அது.
~

Comments