மனிதர்கள் - முவ்வா விஜயகுமார்

மனிதர்கள்

முவ்வா விஜயகுமார்


சென்னையில் அது ஒரு டிஸம்பர் மாத பனி நாள்.


சிறு வயது முதலே எனக்கு அதிகாலையில் எழுந்து எல்லாம் பழக்கமில்லை. 07:00 மணிக்கு மேல் தான் நம் திருப்பள்ளி எழுச்சி. இன்று வரை இப்பழக்கம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.

அன்றும் அப்படித்தான். 09 மணி அலுவலகத்திற்கு 07 மணிக்கு எழுந்து அரக்க பரக்க குளித்து மிச்சமிருந்த முந்தைய தினம் வாங்கிய மாடர்ன் பிரட்டை தண்ணீரில் தோய்த்து முழுங்கிவிட்டு ஓட்டமாய் ஓடினேன்.

09:05 க்கு அலுவலகம் நுழைந்ததும் நாராயணன் சார் கூப்பிட்டார்.

சக்தி, நீ TNPSC எழுதினே ல்ல… ரிஸல்ட் வந்திருக்கு பார்த்தியா? என்றார்.

எழுதினேன் சார். எனக்கு நம்பிக்கையில்லை. அதெல்லாம் எனக்கு கிடைக்காது என்றேன்.

உன் நம்பரை சொல்லு. நான் பார்க்கிறேன். ஹால் டிக்கெட்டை காண்பி என்றார்.

சார், ரூமில் இருக்கு. நாளை கொண்டு வரேன் என்றேன்.

போடா… இப்போவே எடுத்து வா. பார்த்துடலாம். எனக்கென்னவோ நீ பாஸ் பண்ணிருப்பேன்னு தோணறது.. என்றார்.

ரூமுக்கு வந்து ஹால் டிக்கெட்டை தேடி எடுத்து மீண்டும் ஒரே ஓட்டம் அலுவலகம் நோக்கி.

நாராயணன் சார் ரிஸல்ட் பார்த்துவிட்டு அப்படியே என்னை இறுக அணைத்து கொண்டார்.

எனக்கு குழப்பமாய் இருந்தது.

அதற்குள் ஆபீஸ் முழுதும் செய்தி பரவி எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

நாராயணன் சார் தென் பிராந்திய மேலாளர் முவ்வா விஜயகுமார் ரூமுக்குள் நுழைந்து தகவலை சொன்னார்.

குமார் சார் கூப்பிட்டார்.

கன்கிராட்ஸ்… என்று கைகுலுக்கிவிட்டு உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் ? என்றார்.

தெரியலை சார்… என்றேன்.

அதற்குள் நாராயணன் சாரே கால்குலேட் பண்ணி இவ்வளவு சம்பளம் கிடைக்கும் சார் என்று அவரிடம் கூறினார்.

சக்தி, அதைவிட அதிகம் கிடைக்க நான் போர்டில் பேசுகிறேன், நீ இங்கேயே ஏன் கண்டினியு பண்ணக்கூடாது? Take your time என்றார்.

மறுபடி குழப்பம்.

நண்பர்களும் உறவினர்களும் அரசு வேலையில் சேர வலியுறுத்தினார்கள்.

இரண்டு நாள் கழித்து அரசு வேலையில் சேரும் என் முடிவை அவருக்கு சொன்னேன்.

வாழ்த்தி வழியனுப்பினார். முக்கியமான அறிவுரை ஒன்றும் சொன்னார்.

அலுவலகத்தில் நுழையும் போது சொந்த பிரச்சினைகளை வெளியே விட்டு விடு. அலுவலகத்தை விட்டு கிளம்பும்போது அலுவல வேலைகளை அதே போல் அங்கேயே விட்டு விட்டு வீட்டுக்கு செல். Work Life Balance maintain செய். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்றார்.

முடிந்தவரை இப்போதும் கடைபிடிக்கிறேன் அவர் அறிவுரையை.
~

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் கேரியர் உள்ளே நுழையும் போது வந்த குழப்பம் இப்போது மறுபடியும்.

ஒரு நாராயணன் சார், ஒரு விஜயகுமார் சார் போல் மறுபடியும் யாராவது வராமலா போய்விடுவார்கள்.
~

பிகு:

நன்றி: லக்கி பாஸ்கர்

Gambling க்கு மட்டும் அல்ல எல்லாவற்றுக்குமே, ஏன், வேலைக்கும் கூட இந்த டயலாக் பொருந்தும் தானே.

Comments