வாழ்த்து விநாயகர் சதுர்த்தி

 வாழ்த்து

 விநாயகர் சதுர்த்தி



அன்பு சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

(திருமூலரின் திருமந்திர பாடல்)

ஐந்து கரங்களைக் கொண்டவரே!
ஆனை முகத்தவரே!
நிலாவின் இளம்பிறை போன்ற வளைந்த தந்தம் பெற்றவரே!
சிவபெருமானின் மூத்த பிள்ளையே! ஞானக் கொழுந்தாக விளங்குபவரே! உம்மை என் புத்தியில் வைத்து வணங்குகின்றேன்.
~
சுக்லாம்பர தரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்ந வதநம் த்யாயேந் ஸர்வ விக்நோபசாந்தயே
~

சுக்லாம் பரதரம் என்றால் வெள்ளை உடை உடுத்தியவர். சிவன், சரஸ்வதிக்கு கூட வெள்ளை உடை தான். மனிதர்கள் உட்பட எல்லாருக்குமே வெள்ளை வேட்டி தான்.

விஷ்ணும் என்றால் எங்கும் பரவியிருப்பவர். எல்லா தெய்வங்களும் இப்படி எங்கும் பரவியே இருக்கிறார்கள்.

சசிவர்ணம் என்றால் பால் நிலா போல நிறம். இதுவும் கூட பல தெய்வங்களுக்கு பொருந்தும்.

சதுர்புஜம் என்றால் நான்கு கைகள். அநேக தெய்வங்கள் நான்கு கைகளுடன் இருக்கிறார்கள்.

ப்ரஸந்ந வதநம் என்றால் ஒளிவீசும் முகம். இதுவும் எல்லாருக்கும் பொருந்தும்.

ஆக, இதை எப்படி விநாயகர் மந்திரம் என சொல்ல முடியும் என புரியாமல் கேட்கலாம்.

கடைசி பதமான விக்நோப சாந்தயே என்பதற்கு தடைகளை நீக்குபவர் என்று பொருள்.

ஆம்...தடைகளை நீக்குபவர் விநாயகர் மட்டுமே.

த்யாயேந் என்றால் வணங்குதல்.

இந்த எளிய மந்திரத்தை சொல்லி விநாயகரை வணங்கிய பின் ஒரு நிகழ்ச்சி, தொழில் அல்லது பணியைத் துவங்குங்கள்... அது வெற்றிகரமாக முடியும்.
~
தடைகளை தகர்த்தெறிந்து, வேண்டிய காரியங்களை வெற்றிகரமாக சாதித்து தரும் விநாயகருக்கு பணிவான வணக்கங்களை பாத கமலத்தில் பணிந்து சமர்ப்பிக்கிறேன்.

Comments