அஞ்சலி
அஞ்சலி
கரிசல் காட்டு ராஜா கி.ரா.
மாணவப் பருவத்தில் கரிசல் வட்டார மொழியை எனக்கு அறிமுகப்படுத்தியது கி.ரா. தான். அந்த மொழியின் இசைமையும், இனிமையும் என்னை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கு கலந்த தமிழ் பிரவாளம் பிரவாகமாக என் நெஞ்சில் ஓடியிரிக்கிறது.
அவரின் கதை சொல்லும் பாணி அலாதியானது. சாதாரண பாமரனுக்கும் புரியும் நடை அவருடையது. ரசிக்கும் நடையும் கூட.
அவரின் கோபல்லபுரம் மற்றும் கோபல்லபுரத்து மக்கள் இரண்டு நூல்களும் முக்கியமான வரலாற்று ஆவணங்கள்.
தெலுங்கு பேசும் மக்கள் ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வந்த சோக வரலாறு முதல் நூலில் என்றால் அடுத்த நூல் தரிசான பூமியை செழிப்பாக மாற்றிய அவர்களின் உழைப்பையும் எளிய வாழ்க்கையையும் அற்புதமாக விளக்கும் வரலாற்று பெட்டகம்.
இவ்வளவு வயதில் கொஞ்சமே கொஞ்சம் தான் அவர் எழுதியிருக்கிறார்.
ஆனால் அத்தனையும் வைர வைடூரியங்கள்.
வானுலகத்து மக்களுக்கு கதை சொல்ல புறப்பட்டுவிட்ட அந்த கரிசல் பிதாமகருக்கு இந்த எளியேனின் கண்ணீர் அஞ்சலி.
போய் வாருங்கள் எழுத்துலக பீஷ்மரே



Comments
Post a Comment