சினிமா - மதகஜ ராஜா

சினிமா


மதகஜ ராஜா


கல்கி 2898 க்கு அப்புறம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று “மதகஜ ராஜா” பார்த்தேன்.

ஏமாற்றவில்லை சுந்தர் சி. மூன்று மணி நேர முழு நீள ஆக்‌ஷன் காமடி.

லாஜிக் லாம் பார்க்காமல் படமாய் மட்டும் பார்த்தால் வாய்விட்டு சிரித்துவிட்டு வரலாம்.

சந்தானம் அவருக்கே உரிய பாணியில் கலக்கியிருக்கிறார். அவர் வரும் சீனெல்லாம் சிரிப்பு காரெண்டி.

கடைசி அரை மணி நேரம் டெட் பாடியாக வந்து மனோபாலா தூள் கிளப்பியிருக்கிறார்.

“தூள்” படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பெரும் பகுதி கதையை அதிலிருந்து உருவியிருக்கிறார்கள். படம் தரும் கலகலப்பிற்க்காக அதை மன்னித்துவிடலாம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட படமாம்.

10 ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையுலகம் நன்றாக தான் இருந்திருக்கிறது.

ஹும்… அப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

Comments