லைப்ரரி
இரண்டு விஷயங்களில் எனக்கு அதீத ஆர்வமுண்டு.
ஒன்று, நல்ல காபியை தேடி கண்டடைந்து சுவைப்பது.
இரண்டு நல்ல நூல்களை தேடிச் சென்று வாங்கி படிப்பது.
முன்னது பாட்டியிடமிருந்தும், இரண்டாவது என் அம்மாவிடமிருந்தும் தானாக என்னிடம் வந்து சேர்ந்தவை.
நல்ல காபியை தேடி சுவைக்கும் பழக்கம் என்னிடமிருந்து இளையவன் அருணுக்கும் நல்ல புத்தகங்களை தேடிப் படிக்கும் பழக்கம் என்னிடமிருந்து மூத்தவன் சாய்க்கும் சென்று சேர்ந்துள்ளது எனக்கு மிகவும் மகிச்சியை தருகிறது.
நிற்க,
சில ஆண்டு இடைவெளிக்கு பின் இன்று சென்னையில் நடைபெறும் 45வது புத்தக கண்காட்சிக்கு சாய் உடன் சென்று வந்தேன்.
கலவையான புத்தகங்களை தேடி தேடி வாங்கினேன்.
படிக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது.
நன்றி சாய்.
படித்த பின் வழக்கம்போல் வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.
நன்றி
~
பிகு: அருணுக்கு காபி பழக்கம் தொற்றிக் கொண்டதால் புத்தகம் படிக்கமாட்டார் என்று நினைக்க கூடாது. படிப்பதை விட பார்ப்பதும் கேட்பதும் அவர் முன்னுரிமை. இணையம் மூலம் அவருக்கு தேவைப்படுபவைகள் அத்தனையையும் அப்டேட் செய்துகொண்டு விடுவார்.



Comments
Post a Comment