பிக்பாஸ்
பிக்பாஸ் (16.102021 முடிய)
பிக் பாஸ் பற்றி எழுத வேண்டாம் என்று தான் உண்மையிலேயே நினைத்தேன்.
இதற்கு காரணம் வேலைப்பளு. மற்றும் புதிதாக ஏற்றுக்கொண்ட சில கூடுதல் பணிகள் தான்.
என்னால் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சியை பார்க்க முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பம் முதல் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் அந்த சந்தேகம் இப்போது ஓரளவுக்கு தீர்ந்துள்ளது.
நேரலையில் இல்லாவிட்டாலும் பின்னர் ஓரளவு தொடர்ச்சியாக ஹாட்ஸ்டார் மூலம் பார்க்க முடிகிறது.
பார்த்தவரை என் அனுபவத்தை பகிர்கிறேன்.
~
பிக்பாஸ் போன்ற ஒரு ரியாலிடி ஷோ தேவையா என்ற பஞ்சாயத்து சீசன் 1 முதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
சினிமா தேவையா, டிராமா தேவையா, சீரியல் தேவையா, தினசரி அரசியல் நிகழ்வுகளை அலசுவது தேவையா... என்று எல்லாவற்றையும் இதை போன்ற கேள்விகள் மூலம் துவைத்து போட முடியும்.
பிக்பாஸ் என்னை பொறுத்தவரை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அலுவலக வேலை தரும் அழுத்தங்களுக்கும், தனிப்பட்ட மனிதனுக்கு பல்வேறு சூழல்களால் ஏற்படக்கூடிய மன எழுச்சி வீழ்ச்சிகளுக்கும் ஒரு வடிகால்.
தட்ஸ் ஆல். இதற்கு மேல் விரிவான பதில் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
சரி பிக்பாஸ் சீசன் 5 இதுவரை எப்படி ?
பார்க்கலாம்.
~
இதற்கு முன் வந்த சீசன்களை ஒப்பிட்டால் இது செலிபிரிட்டிகள் ரொம்ப குறைவான அல்லது செலிபிரிட்டிகளே இல்லாத ஒரு சீசன் என்பது முதல் நாளிலேயே தெரிந்து விட்டது.
தமிழ் பிக்பாஸ் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்ட தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 கூட செலிபிரிட்டிகள் இல்லாத ஒரு சீரியலே.
தமிழ் பிக்பாஸில் 7 ஆண்கள். 10 பெண்கள் மற்றும் ஒரு டிரான்ஸ்ஜெண்டர். இத்தனை கூட்டம் ஏன் என்றே தெரியவில்லை.
அறிமுக நாள் நிகழ்ச்சி சுவாரசியங்கள் ஏதுமின்றி ரொம்ப தட்டையாக இருந்தது. பிக்பாஸ் ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய ஏமாற்றம்.
நமீதா மாரிமுத்து என்ற டிரான்ஸ்ஜெண்டரை பங்கேற்க வைப்பதன் மூலம் புதுமையாய் ஏதாவது செய்யலாம் என்று நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது.
ஆனாலும் தெலுங்கு இதில் முந்தி கொண்டுவிட்டது. தெலுங்கு சீசன் 4 லேயே தமன்னா சிம்மாத்ரி என்ற மூன்றாம் பாலினத்தவர் பங்குபெற்று விட்டார். சீசன் 5ல் கூட ப்ரியங்கா சிங் என்பவர் பங்கேற்கிறார்.
அறிமுக நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து பற்றிய அறிமுகம் நெகிழ்ச்சியாக இருந்ததென்னவோ உண்மை தான். ஆனால் அதன் பின்பு என்ன நடந்தது, மிக விரைவிலேயே அவர் பிக்பாஸை விட்டு வெளியேற என்ன காரணம், திரைக்கு பின் நடந்தது என்ன, ஏன் யாருமே நமீதாவை பற்றி பேசவே மாட்டேன் என்கிறார்கள்..?
இதெல்லாம் புரியாத புதிர்.
நிகழ்ச்சி 100 நாட்கள் முடிந்த பின்னர் தான் "குற்றம் - நடந்தது" என்ன என்பது போன்ற இவரை பற்றிய விவரங்கள் வெளிவரும் போல.
முதல் சில நாட்கள் நிகழ்ச்சி படு போர். ப்ரியங்கா மட்டுமே தனது அனுபவம் மூலம் சுவாரஸ்யம் ஏற்படுத்த மெனக்கட்டு கொண்டிருந்தார்.
இமான் அண்ணாச்சி ஸ்டார்டிங் டிரபிளுக்கு பிறகு ஓரளவு நிகழ்ச்சிக்குள் நுழைந்து விட்டார்.
ராஜு தனது மிமிக்ரி திறமைகளை அரங்கேற்றி காண்பித்தார். நன்றாகவே பாக்கியராஜை டிரோல் செய்தார். பாக்கியராஜும் பெருந்தன்மையாக அவரை வாழ்த்தினார்.
ராஜுவின் கண்கள் ப்ளேக் மாஜிஷியன் கண்களை ரிசம்பிள் செயகிறது. அவருடன் பேசுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வசியக்காரன் இவன்.
ஜெமினி கணேசன்-சாவித்ரியின் பேரன் அபிநய் போட்டிகளின் விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தவறாக விளையாடி எரிச்சல் ஏற்படுத்தினார்.
போன சீசனில் பாலாஜி தோற்றத்தில் பாகுபலி போல் இருந்தார் என்றால் இந்த சீசனில் நிரூப். கூடுதலாக ஏசுநாதர் போல நீள தலைமுடி மற்றும் தாடி. பாலாஜியால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் ஏற்படுத்த முடிந்தது. இவர்..? ம்ஹ்ம்...
சிபி, வருண் போன்றோர் எல்லாம் திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் இருக்கிறார்கள்.
அபிஷேக் ராஜா பேசினாலே என்னவென்றே புரியாத ஒரு எரிச்சல் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.
ஏற்கனவே யூடியூப் நிகழ்ச்சிகள் மூலம் அவர் மீது நமக்கு ஏற்பட்டிருக்கும் இரிடேஷனின் தொடர்ச்சியான வெளிப்பாடு போல அது.
பார்க்கலாம்.. இதிலாவது எரிச்சல் ஏற்படுத்தாமல் அவர் மீதான நமது எண்ணத்தை அபிஷேக் ராஜா மாற்றிக் காட்டுகிறாரா என்று.
சின்னப்பொண்ணு அம்மா பாவம். அவரை பார்க்கும் போதெல்லாம் பலியாடு என்ற நினைப்பு தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை. அவர் சீக்கிரம் வெளியேறுவது அவரின் உடல்/மன நிலைக்கு நல்லது.
தாமரை பிக்பாஸ் ஹவுஸின் முதல் கேப்டன். அவரின் வெள்ளந்தியான தஞ்சை மாவட்ட வட்டார பேச்சுமொழி அவர் மேல் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தினாலும் அவர் அந்த அனுதாபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாரோ என்ற சந்தேகமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
ஐக்கி பெரி, இசைவாணி,மதுமிதா, சுருதி, நாடியா... ம்ஹ்ம்... ஒன்றும் சொல்வதற்கில்லை.
பெண் போட்டியாளர்களில் மூன்று பேர் கவர்கிறார்கள்.
சந்தேகமேயில்லாமல் ப்ரியங்காவிற்கு அதில் முதல் இடம்.
நிகழ்ச்சி கடந்த சில நாட்களில் ஓரளவுக்கு பிக் அப் ஆகியிருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவரே. அர்ச்சனா வின் வாரிசாக இந்த சீசனில் இவர் இருப்பாரோ என்று முதலில் சந்தேகப்பட்டேன். ஆனால் ப்ரியங்கா அப்படியில்லை. தான் ஒரு நல்ல எண்டர்டெய்னர் என்பதை நாளும் பொழுதும் நிரூபித்து கொண்டே வருகிறார்.
அடுத்து அக்ஷரா ரெட்டி. அழகு அல்லது மெழுகு சிலை. ஹவுஸ் மேட்களுடன் கலந்து பழக மாட்டேன் என்கிற குற்றச்சாட்டுகள் பலமாக இவர் மேல் எல்லோரும் வைத்தனர்.
ஆனால் இப்போது எல்லோருடனும் நன்கு பழகுகிறார். ராஜுவுடனான இவரின் நட்பு கவின்-லாஸ்லியா வை ஏனோ அவ்வப்போது நினைவு படுத்தி தொலைக்கிறது. நல்லவேளை ஒருவழியாக நேற்று ராஜுவுக்கு தங்கை போல் நான் என்று திருவாய் திறந்து விட்டார்.
இந்த சீசனில் எனக்கு பிடித்த போட்டியாளர் பாவ்நி ரெட்டி. அவரின் அழகும், கொஞ்சு தமிழும் ஆரம்பத்தில் நெஞ்சை அள்ளியது. பிற போட்டியாளர்களுடன் பழகுவதிலும் அவரிடம் நளினமும் நாகரிகமும் தென்பட்டன. ஆனால் சமீப சில நாட்களாக ஓவர் திங்கிங் ஆக இருக்கிறார். அதன் விளைவாக நிறைய புலம்புகிறார். அபிநய் உடன் நேற்று இவர் பேசியது தாழ்வு மனப்பான்மை அல்லது தவறான புரிந்து கொள்ளல் வகையை சேர்ந்ததாக இருந்தது.
பாவ்நி ரெட்டி இந்த சீசனில் ஒரு ஷெரின் போல வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
கடைசியாக ஆண்டவர்..
ஆண்டவருக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
தயவுசெய்து தெலுங்கு பிக் பாஸ் பாருங்கள் ஆண்டவரே.
இடியாப்ப சிக்கலாக இருக்கும் சொந்த குடும்ப பிரச்சினைகளுக்கு நடுவே நாகார்ஜுன் எவ்வளவு புரொபஷனலாக நடத்தி கொண்டு செல்கிறார் என்று பாருங்கள்.
நாகார்ஜுனின் காஸ்டியூமுடன் உங்கள் உடைகளை ஒப்பிட்டு பாருங்கள் ஆண்டவரே. ஒரு கோமாளி போல் கோட் அணிந்து அதன் ஊடாக துப்பட்டா போல் ஒன்றை உடுத்தி கொண்டு வந்தீர்களே..
இதெல்லாம் என்ன மாதிரியான உடை என்று தைரியமாக அணிந்து கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தீர்கள் ?
நாகார்ஜுன் உங்களை போல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை பற்றி பீற்றி கொள்வதில்லை. நிகழ்ச்சி பற்றியும், போட்டியாளர்களின் திறமைகளையும் சொதப்பல்களையும் எவ்வாறு சீர் தூக்கி அலசுகிறார் என்று பார்த்து திருந்துங்கள்.
ஏண்டா சனி ஞாயிறு வந்து தொலைக்கிறது என்று எண்ண வைத்து விடாதீர்கள் கமல் ஜி.
பி.கு :
நாடியா சாங் இன்று எலிமினேட் ஆவார் என்று தெரிகிறது. உண்மையாக இருந்தால் அவருக்கும் நமக்கும் நல்ல செய்தி இது



Comments
Post a Comment