நண்பர்கள்
நீண்ட நாள் முகநூல் நண்பரும் மலேசிய தமிழருமான திரு கோவிந்த் பாலா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு நேற்று அமையப் பெற்றது.
நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று நான் விரும்பிய மிகச் சில நண்பர்களில் அவர் பிரதானமானவர். ஏனெனில் தொலைபேசி வாயிலாக எங்களுக்குள் நிகழ்ந்த நிறைய கருத்துப் பறிமாற்றங்கள் அவரை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டி விட்டிருந்தது.
அவசரமாக நடைபெற்ற ஒரு அலுவலகம் சார்ந்த கூட்டத்தினால் நேற்று அவரை நீண்ட நேரம் காக்க வைத்ததின் குற்ற உணர்ச்சி இப்போதும் என் மனதை வருத்திக் கொண்டிருக்கிறது.
ஸாரி சார்.
மூன்று தலைமுறகளுக்கு முன் தமிழகத்தின் திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தில் இருந்து தோட்ட வேலைக்காக மலேசியாவுக்கு குடிபெயர்ந்த அவர் குடும்பம் பற்றிய விவரங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். இடம் பெயர்தலின் வேதனை அவர் வார்த்தைகளில் தெரிந்தது.
பஞ்சாப்பில் பொறியியல் படிக்கும்போது தனது வேர்களை தேடி திருவண்ணாமலை வந்ததும் அங்கு உள்ள உறவினர்களை இந்தியா வரும்போதெல்லாம் சென்று சந்தித்து வருவதையும் தெரிவித்தார்.
பேச்சின் ஊடாக இரண்டாம் உலகப் போரின் போது இரு புறமும் மாட்டிக் கொண்ட மலேசியத் தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்களையும் சயாம் மரண ரயில் பணியில் ஆயிரக்கணக்கான மலேசியத் தமிழர்கள் உயிரிழந்த நிகழ்வையும் அவர் விவரித்தபோது மனம் கனத்தது.
உயிரிழந்தவர்களுக்கு இந்திய அரசின் சார்பாக நினைவிடம் அமைக்காத குறை அவரிடம் நிறைய உள்ளது.
நேரம் வரும் சார். அப்போது கண்டிப்பாக உங்கள் குறை களையப்படும்.
இந்தியா குறித்த உங்கள் நேர்மறையான சிந்தனை அருமை சார். உங்கள் வாக்குப்படி சீனாவிற்கு இணையாகவும், சீனாவை விஞ்சியும் கண்டிப்பாக விரைவில் முன்னேறுவோம் சார்.
'வந்தவர்கள்' நாவலை அவருக்கு அன்பளிப்பாக அளித்தேன்.
இடம் பெயர்தலின் வேதனையை சுமக்கும் அவரைவிட தகுதியான வேறு யாருக்கு அதை அளிக்க முடியும்.
அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக நீண்ட நேரம் உங்களுடன் பேசவேண்டும் சார்.
நேறைய பொழுதை மகிழ்ச்சியான நல்ல பொழுதாக அமைத்து தந்த இறைவனுக்கு மிக்க நன்றி.
~
பிகு:
உங்கள் தெளிவான உச்சரிப்பும் தடையற்ற பிரவாகமாக உங்கள் கருத்துகளை பொழிந்த பாங்கும் ரியலி எக்ஸலண்ட் சார்.
சல்யூட்



Comments
Post a Comment