லைப்ரரி

லைப்ரரி


டந்த இரண்டு ஆண்டுகளாக Book Fair போகாமல் தான் இருந்தேன்.

Book Fair என்பது வெற்றுப் பிரச்சார கூடாரமாகிவிட்டிருந்தது என்ற கருத்து அக்கால கட்டத்தில் எனக்கு ஏற்பட்டிருந்தது.

சாய்கோபால்  மற்றும் கந்தன் ஆகியோரின் வற்புறுத்தலால் கடைசி நாளுக்கு முதல் நாளான நேற்று Book fair சென்று வந்தேன்.

பெரிய கூட்டம்பில்லாதது வசதியாக போயிற்று.

பல ஸ்டால்களில் நாட்டுடைமையாக்கப்பட்ட கல்கி உள்ளிட்டோர்களின் நூல்களான பொன்னியின் செல்வன் போன்றவை நிரம்பி வழிந்தன.

வழக்கம் போல் திராவிட, பொதுவுடைமை சித்தாந்த நூல்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாற்று வலதுசாரி சித்தாந்த நூல்களும் கணிசமான அளவில் இடம் பிடித்திருந்தது இந்த ஆண்டின் ஆச்சரியம்.

ISKCON, Infinithism, சின்மயா மிஷன், ராமகிருஷ்ண மிஷன், மற்றும் சில ஆன்மீக அமைப்புகளின் ஸ்டால்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

நக்கீரன் போன்ற சில புகழ்பெற்ற பதிப்பகங்களின் ஸ்டால்கள் கூட்டமின்றி அமைதியாக காணப்பட்டது.

இந்து ஆன்மீக அமைப்புகள், இஸ்லாமிய ஆன்மிக அமைப்புகளின் ஸ்டால்கள் இருந்த அளவிற்கு கிறித்துவ மத அமைப்புகளின் ஸ்டால்களை பார்க்க முடியவில்லை.

ஆனால் வெளியே நிறைய இலவச பைபிள் புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு கொண்டிருந்தது.

வழக்கம் போல் வெளியே த நா மு எ ச போன்ற அமைப்புகள் பேச்சரங்கம் நடத்திக் கொண்டிருந்தனர். பார்வையாளர் அரங்கில் பெரும்பாலும் காலி இருக்கைகள்.

அறுசுவை அரசு கேண்டினில் பில் போடும் இடத்தில் நின்றிருந்த கூட்டத்தை கண்டு மிரண்டு பிளாட்பார கடையில் மசாலா கடலையை வாங்கி கொறித்தோம்.

அசைவ உணவுக்கான கேண்டீன் எதுவும் தென்படவில்லை. என் உணவு என் உரிமை கோஷ்டிகள் இதுவரை வாய் திறக்காதது ஆச்சரியம் தான்.

சரி, நாங்கள் வாங்கிய புத்தகங்களின் விவரத்திற்கு வருகிறேன்.

1. ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா
2. வஸந்த கால குற்றங்கள் - சுஜாதா
3. 24 ரூபாய் தீவு - சுஜாதா
4. சொர்க்க தீவு - சுஜாதா
5. ஓடாதே - சுஜாதா
6. தூண்டில் கதைகள் - சுஜாதா
7. மெர்க்குரி பூக்கள் - பாலகுமாரன்
8. மக்மோஹன் கோடு - கே என் ராகவன்
9. 18 வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
10. ஆழி பெரிது - அரவிந்தன் நீலகண்டன்
11. மித்ரன் - சிரா
12. வந்தவர்கள் - ஆமருவி தேவநாதன்
13. யூரோடெக் - றின்னோசா
14. எமோஷனல் இண்டெலிஜென்ஸ் - ஜி.எஸ். சிவகுமார்

அவ்வளவுக்கு தான் காசு இருந்தது.

இன்று கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் தவற விடாதீர்கள்.

Comments