அஞ்சலி

 அஞ்சலி


பூண்டி ஸ்ரீமான் துளசி ஐயா வாண்டையார்


மிக பின் தங்கிய ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் இன்று வீட்டிற்கு ஒரு பட்டதாரி இருக்கிறார் என்றால் அதற்கு காரணமான கல்விக் கண் திறந்த வள்ளல்.


டிசிப்ளினான ஒரே ஒரு கல்லூரி மூலம், அது வழங்கிய கல்வி மூலம், முரட்டு கலாச்சாரம் நிறைந்த ஒரு பிராந்தியத்தையே அழகாக டிரான்ஸ்பார்ம் செய்த நிஜ 'தேவர் மகன்'.

மனதில் உறுதியும், லட்சிய வேட்கையும், அதை அடைய சிறப்பான யுக்திகளையும் கையாண்டு அவர் உருவாக்கிய ஆளுமைகள் எத்தனை எத்தனை.

வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள் ஐயா. ஆயிரக்கணக்கான பேரை வாழ வைத்தீர்கள்.

மகாத்மாவின் 'தர்மகர்த்தா' சிந்தனைக்கு உங்கள் வாழ் நாளெல்லாம் உழைத்து உருவம் கொடுத்தீர்கள்.

போய் வாருங்கள் ஐயா. என்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள்.

பூண்டி ஸ்ரீமான் துளசி ஐயா வாண்டையார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ஓம் ஷாந்தி 🙏


Comments