கொஞ்சம் காபி கொஞ்சம் மெமரீஸ் - 1
கொஞ்சம் காபி
கொஞ்சம் மெமரீஸ் - 1
அருமை தம்பி பிரேம்நாத் இதை ஓபனாகவே மீட்டிங்கில் போட்டு உடைத்து விட்டார்.
ஒவ்வொரு இடத்திலும் நல்ல காபியை தேடி தேடி அலைந்து குடித்திருக்கிறேன்.
ஆரம்ப நாட்களில் சரவண பவன் காபிக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. அபின் சொட்டே சொட்டு கலக்கறாண்டா அதுலே… ஹாலாஸ்யம் மாமாவின் கண்டுபிடிப்பு அது.
வேலை நிமித்தம் பல ஊர்களுக்கு செல்லும் போதெல்லாம் காபியை தேடி அலைவேன்.
நாகப்பட்டினத்தில் வேலை பார்த்த சமயத்தில் பரசுராமன் சார் மூலமாக அப்படி கண்டுபிடித்தது தான் காரைக்கால் வடிவேல் கடை.
அவர் கடையில் பில்டர் காபி மட்டும் தான் கிடைக்கும். ரொம்ப சின்ன கடை. காலை மூன்று மணி நேரம் மாலை மூன்று மணி நேரம். அவ்ளோ தான். முக்கிய விஐபி முதல் பலரும் லைன் கட்டி நிற்பார்கள்.
நாகப்பட்டினத்தில் பணியாற்றியபோது நினைத்த போதெல்லாம் காபி குடிக்க காரைக்கால் கிளம்பி விடுவோம்.
அருண்மொழி மூலமாக ஶ்ரீரெங்கம் முரளி காபி அறிமுகமானது. வடிவேல் கடையை விட இன்னும் சூப்பர் அது. தொடர்ச்சியாக மூன்று காபி கூட at a time குடித்திருக்கிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் முரளி காபியின் தீவிர ரசிகர்.
ராக்போர்டில் திருச்சி ஜங்ஷனில் இறங்கி வாசலுக்கு வந்தால் ஒரு பெரிய கியூ நிற்கும். வரிசையில் பொறுமையாக நின்றால் செம பிரஷாக டிகாக்ஷன் காபி கிடைக்கும். ஜங்ஷனில் செயல்படும் புஷ்பம் ரெஸ்டாரெண்ட் அவுட்லெட் தான் அது.
சுவை பிரமாதம். அளவு ரொம்ப கம்மி. இரண்டு கப் காபி குடித்தால் தான் நமக்கெல்லாம் சரிப்பட்டு வரும்.
எல்லாவற்றையும் தூக்கி அடித்த காபி எதுவென்றால் அது தலைமை அலுவலகத்தில் பதிவாளரின் இன் அலுவலக உதவியாளர் தம்பி Murali Krishnan போட்டு கொடுப்பது தான். அந்த காபியின் ருசி அபாரம்.
அதை இன்ஸ்பிரேஷனாக கொண்டு எங்கள் PA & F&B விங் கில் இண்டக்சன் அடுப்பு வாங்கி உயர்தர Pristine காபித் தூளில் தம்பி Raja Rajan கனகசபை ஆகியோர் இணைந்து காபி தயாரித்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.
IAS ஆபிஸர்கள் முதல் அலுவலகம் வரும் விஸிட்டர்கள் வரை முரளி மற்றும் ராஜராஜன் போடும்
அந்த காபிக்கு ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த ஆபிஸில் காபி நன்றாக இருக்கும், சாப்பிடுங்கள் என்று என்று எங்கள் பாஸ் திரு நந்தகுமார் IAS பெருமையாக கூறும் அளவிற்கு காபி வாசம் அலுவலக வளாகம் முழுக்க மணம் வீசிக் கொண்டே இருக்குறது
எனது பிரிவுபச்சாரத்திற்காக நடைபெற்ற விழாவில் கூடுதல் பதிவாளர்கள் பிருந்தா மேம் அண்ட் சீனிவாசன் சார் ஆகியோர் நம்ம ஆபிஸ் coffee shop என்று புகழும் அளவிற்கு அலுவலகத்தில் தயாரிக்கும் காபி பிரபலமடைந்துள்ளது.
நான் தம்பி முரளி, ராஜராஜன், கனகசபையின் காபியை ரொம்பவே மிஸ் செய்கிறேன். 😞
Legacy யை விட்டுடாதீங்க தம்பிகளா !



Comments
Post a Comment