அஞ்சலி
பரசுராமன் சாரின் மரண செய்தி எதிர்பாராத இந்த தருணத்தில் அதிர்ச்சியளிக்கிறது.
நல்ல ஆன்மீகவாதி. சௌராஷ்டிர இனம் மற்றும் மொழி குறித்த நிறைய தகவல்கள் அவரின் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
பழைய MSV, TMS பாடல்களின் பரம ரசிகர். புதிய பாடல்களை சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளுவார்.
என்னைப் போல் அவரும் ஒரு காபி ரசிகர். நல்ல காபியை தேடி தேடிச் சென்று பருகியிருக்கிறோம்.
காரைக்கால் வடிவேல் காபி கடையை எனக்கு அறிமுகம் செய்தவர் அவர் தான்.
நாகப்பட்டினத்திலிருந்து நான் சென்னை வந்த பின்னரும் நல்ல தொடர்பில் இருந்தார். சில வாரங்கள் முன் தொலைபேசியில் பேசும்போது தனக்கு உடல் நலம் சரியில்லை என தெரிவித்தார். உடல் நலம் நன்கு பராமரிக்கக் கூடியவர் தான். ஆனாலும் வயது மூப்பின் உபாதைகள் அவரை சோர்வடைய வைத்திருந்தன.
என் நாகப்பட்டினம் அலுவலக வாழ்க்கை என் கேரியரில் மறக்க முடியாத ஒன்று. அதை நினைவில் வைத்து நான் மகிழ்ச்சியடைய முக்கிய காரணமாக இருந்தவர்களில் அவர் முக்கியமானவர்.
ராமனின் திருவடிகளில் அவரின் ஆன்மா இளைப்பாறட்டும்.
அவரின் மகன் சதிஷ் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
We miss you sir 



Comments
Post a Comment