இசை

இசை



ரஹ்மான் பாடல்கள் கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று சாய் Saigopal Sakthi சொல்வது உண்மை தானோ என்று இன்று உணர்ந்தேன்.
பல நாள் கழித்து ரஹ்மான் இசையில் எல்லா பாடல்களுமே அருமையாக வந்திருக்கிறது "அமர்சிங் சம்கிலா" (Amarsingh Chamkila) ல்.
குறிப்பாக
1. இஷ்க் மித்தாயே
2. து கியா ஜானே
3. விதா கரோ
4. பாஜா
போன்ற பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கின்றன.
"து க்யா ஜானே " பாடல் க்ளாஸிக் ரகம். பாடலும் பாடல் முடிவில் வரும் அந்த ஹம்மிங்கும் வேறு எங்கெங்கோ மனசை இழுத்து செல்கிறது.
இவ்வளவு நாட்கள் இந்த ரஹ்மான் எங்கே தான் போயிருந்தாரோ.
பழைய பன்னீர்செல்வம் ஆக திரும்ப வந்திருக்கிறார். உங்களுக்கான காலம் இன்னும் முடியவில்லை ரஹ்மான். மீண்டும் அடித்து ஆடுங்கள்.

💓💓💓

Comments