யாத்திசை - தமிழ் திரையின் தற்கொலைப்படை

சினிமா
~
யாத்திசை - 2023

ஓவர் பில்டப்புகள் அடங்கியபின் மெதுவாக பார்க்கலாம் என்று இருந்த படம். 

ஒரு வழியாக கடந்த வார இறுதியில் இரு தவணைகளாக பார்த்து முடித்தேன்.

கதை :
பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமான சண்டையில் குறுக்கே புகுந்து பேரழிவை தேடி கொண்ட கொதி என்னும் எயினர் தலைவனின் கதை. 

பாண்டியர்களின் வரலாறு என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு வரலாற்றை இதுவரை நான் கேட்டதுமில்லை படித்ததுமில்லை.

ரொம்ப Flat ஆன கதை.

திரைக்கதை :
படம் பார்ப்பவர்களை இரண்டரை மணி நேரம் சீட்டில் அமர வைக்க இயலாத, சுவாரஸியமற்ற, திருப்பங்கள் இல்லாத திரைக்கதை.

இயக்கம் :
புதியதாய் ஏதாவது பண்ணவேண்டும் என்ற ஆர்வம் புரிகிறது. அதற்காக புரியாத தமிழில் பேசி அதற்கு சப் டைட்டில் போடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.

பிளஸ்
நல்ல லொகேஷன்கள், நல்ல ஒளிப்பதிவு மற்றும் ரொம்பவே நல்ல பின்னணி இசை. 

மைனஸ் :
வரலாறா கற்பனையா என்று புரியாத குழப்பம், படத்தில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று தெரியாத சோகம், அப்போகலிப்டசை பலமுறை நினைவூட்டும்  சாயல்.

மொத்தத்தில் :
வானில் பறக்கும் விமானத்தின் மீது மோதும் பறவை தானும் வீழ்ந்து விமானத்தையும் விபத்துக்குள்ளாக்குவது தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

பொ.செ 2 ஐ காலிசெய்தது தான் இறுதியாக விஞ்சி நின்ற சாதனை.
~

Comments