கஸ்டடியும் கழற்றி வைத்த மூளையும்
சினிமா
~
கஸ்டடி (Telugu) - 2023
Venkat Prabhu Film
ஜாலி மட்டுமே இயக்குனரின் குறிக்கோள்.
அக்கினேனி நாக சைதன்யா ஹீரோ
கீர்த்தி ஷெட்டி ஹீரோயின்
இவர்களுடன்
அர்விந்த்சாமி
சரத்குமார்
ப்ரியாமணி என்று பெரிய பட்டாளம்.
பதவியை பிடிக்கவும் தக்கவைக்கவும் குண்டு வெடிப்பு முதல் அத்தனை கிரிமினல் வேலைகளை செய்யும் முதல்வர் ப்ரியாமணி. இவை எல்லாவற்றையும் மூளையாய் இருந்து நடத்திக் கொடுக்கும் அவரின் வலதுகர போலிஸ் சர்த்குமார். அவரின் அடியாள் அரவிந்த்சாமி. இவர்களைப் பிடிக்க துடிக்கும் சிபிஐ அதிகாரி சம்பத் குமார்.
அகஸ்மாத்தாய் அர்விந்த்சாமியையும் அவரை பிடித்த சம்பத்தும் ஆக்ஸிடெண்ட் ஒன்றில் மாட்டி கான்ஸ்டபிள் ஹீரோ நாக சைதன்யாவால் போலிஸ் ஸ்டேஷன் கஸ்டடியில் வைக்கப்படுகின்றனர்.
விவரம் தெரிந்து அர்விந்த்சாமியை கொல்ல துரத்துகிறார் சரத்குமார். அவரை பாதுகாத்து பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு நாக சைதன்யாவுக்கு.
இடையே காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாக அவரும் இந்த துரத்தலில் மாட்டிக் கொள்கிறார்.
என்ன ஆகிறது இறுதியில்.
இது தான் படம்.
மூளையை கழற்றி வைத்து விட்டுப் பார்த்தால் மூண்று மணி நேரம் போவது தெரியாது.
கூடவே மனசையும் ப்ளையினா வெச்சுக்கணும் முக்கியமா 'மாநாடு' லாம் ஞாபகத்திற்கு வரவே கூடாது.
நிறைய லாஜிக் சொதப்பல்களுடன் ஒரு பக்கா, இல்லை இல்லை....
முக்கா எண்டெடெயினர்.
.jpeg)


Comments
Post a Comment