சினிமா - பலகம் (Telugu) 2023

 சினிமா



பலகம் (Telugu) 2023


எளிய கிராமத்து மக்கள். அவர்களின் வாழ்வியல். கொண்டாட்டங்கள். கலகலப்பான பொழுதுகள்.

உற்சாகமாக கிராமத்தை வலம் வரும் ஒரு தாத்தா. அவரின் மரணம்.

தாத்தாவின் மரணத்திற்கு பின் அவர் குடும்பத்தில் ஏற்படும் பந்தபாச போராட்டங்கள், வெற்று ஈகோ, பகையை ஏற்படுத்தும் சூழல்கள்.

10 லட்சம் கடனை அடைக்க பரிதவிக்கும் விளையாட்டுப் பேரன்.

இவை எல்லாவற்றுக்கும் நடுவே முறைப்பெண் மீது பேரனுக்கு ஏற்படும் அழகான காதல்.
இவ்வளவு போதாதா ஒரு படத்தை ரசித்துப் பார்க்க.

படத்தில் எல்லோருமே கிட்டத்தட்ட புதியவர்கள். கொடுத்த பாத்திரத்தை
அருமையாக
செய்திருக்குறார்கள்.

இந்திய கிராமத்தின் ஆன்மாவை கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

தாத்தாவுக்கு படைக்கப்பட்ட பிண்டத்தை காகம் சாப்பிடுமா என்ற எதிபார்ப்பின் ஊடே கதையை கலகலப்பாகவும் நேர்த்தியாகவும் நகர்த்தி பாஸிட்டிவ் ஆக கதையை முடித்திருக்கும் இயக்குனருக்கு சபாஷ்.

மொழி, பிராந்தியம் வேறு வேறாக இருந்தால் தான் என்ன? பாரத கலாச்சாரம் மற்றும் பண்பாடு வலிமையான ஒரு சங்கிலியாக இந்த தேசத்தை, துணக்கண்டத்தை பின்னி பிணைக்கிறது.

தெலுங்கு படங்கள் எப்போதுமே இதை வலியுறுத்திக் கொண்டே வருகின்றன. பாரதப் பண்பாட்டின் மைய இழையை தொட்டுப் பார்த்து ஆத்மார்த்தமான சந்தோஷ அலையை எழுப்பிக் கொண்டேயிருக்கின்றன.

பலகம் - எளிய மக்களின் வாழ்வியல்.




Comments