சினிமா - ஷ்யாம் சிங்க ராய் (Telugu-2022 )

சினிமா

ஷ்யாம்_சிங்க_ராய் (Telugu-2022 )
~

படத்தோட டைரக்டர் பெயர் ‘ராகுல் சாங்க்ருத்யாயன்’ என்பதாலோ என்னமோ கற்பனை வளம் படத்தில் பொங்கி வழிகிறது. அதுவும் மறுஜென்மம் கான்செப்ட் வேறு. கேட்கனுமா என்ன ?

படத்தின் ஆரம்ப காட்சிகள் சற்று அலுப்பை ஏற்படுத்தினாலும் ‘ஷ்யாம் சிங்க ராய்’
எண்ட்ரியில் இருந்து படம் வேகம் பிடிக்கிறது.

கதை எங்கெங்கோ சுற்றினாலும் நானி, சாய்பல்லவி ஆகியோர் தமது பாத்திரப் படைப்பாலும், நடிப்பாலும் படத்துடன் நம்மை ஒன்றச் செய்து விடுகின்றனர். அதுவும், ஷியாம் சிங்க ராய் தோற்றத்தில் வரும் நானி செம மிடுக்கு.

நவராத்திரி நாட்களின் நடன நிகழ்ச்சிகளும் ஷ்யாம் சிங்க ராய் - மைத்திரி காதல் டெவலப் ஆகும் இடங்களும் கவிதை.

க்ளைமாக்ஸ் எதிர்பார்த்தது தான். ஆனாலும் பார்க்கும்போது நெகிழ்ச்சி ஏற்படுத்த தவறவில்லை.

இறுதியாக, கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்ட்டிற்கும் மறு ஜென்மம் உண்டு என்பதை துணிச்சலாய் சொல்லிவிட்டார்கள்.

ஷியாம் சிங்க ராய் - சுவாரஸ்யம். கண்டிப்பாக பார்க்கலாம்.



Comments