விதி - Life is beautiful

விதி



வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நம்மை கேட்டு நடப்பதில்லை.

சில, நம்முடனேயே கூட இருந்து பாதியில் நம்மை விட்டு விலகி போய்விடும்.

மேலும் சில, போன பல காலத்திற்கு பின்பு மீண்டும் வந்து நம்முடன் இணையும். அல்லது நாம் அதனுடன் இணைவோம்.

ஏன் போனாய் என்றும், மறுபடியும் எதற்கு திரும்ப வந்தாய் என்றும் நம்மால் கேள்வி கேட்க முடியாது.

இது தான் விதி.

ரொம்ப குழப்பமாய் இருக்கிறதா ?

அப்படியே லூஸில் விட்டு விடவும். யோசிக்க எல்லாம் தேவையில்லை.

2015 க்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் பேருந்தில் பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பயணத்தில் யோசித்தது தான் மேலே சொன்னது.

கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த பேருந்திலும் ஏறி நான் பயணம் செய்ததில்லை என்ற நினைப்பே திண்டுக்கல்லில் நேற்று ஒரு சிறிய தொலைவுக்கு டவுண் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தபோது தான் எனக்கே உறைத்தது.

அந்த கொஞ்சமே கொஞ்ச தூரம் பேருந்து பயணம் மகிழ்ச்சியாக இருந்தது.

தொலைந்தவை, தொலைத்தவை எல்லாம் ஒரு நாள் மீண்டும் கிடைக்கலாம் என்னும் நம்பிக்கை வாழ்க்கையை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.

Life is beautiful




Comments