சாப்பாட்டுக்கடை

சாப்பாட்டுக்கடை


பல பெரிய நாகரீக நட்சத்திர உணவு விடுதிகளைக் காட்டிலும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள சாதாரண உணவு விடுதிகளில் உணவு அருமையாக இருக்கும்.

அவ்வாறு அமைந்த ஒரு கிராமப்புற உணவகம் தான் 'அம்பாள் கபே".

மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மற்றும் கும்பகோணம் - காரைக்கால் சாலை சந்திப்பில் அமைந்திருக்கும் ஒரு சிறிய ஊர் கொல்லுமாங்குடி.

அந்த சாலை சந்திப்பின் அருகாமையிலேயே அமைந்திருக்கும் சிறிய உணவகம் தான் 'அம்பாள் கபே'.

நாலு பெஞ்ச் நாலு டேபிள். அவ்வளவு தான்.

முன்னர் நான் நாகப்பட்டினத்தில் பணியாற்றிய காலங்களில் அந்தப் பக்கம் முகாம் செல்லும் போதெல்லாம் பலமுறை அம்பாள் கபே யில் சாப்பிட்டிருக்கிறேன்.

அப்போது ஏற்பட்ட அதே அனுபவம் தான் இப்போதும்.

வயிற்றுக்கு கேடு விளைவிக்காத கிராமத்து சமையல். ருசியான பதார்த்தங்கள். கூட்டு, பொறியல் ஒரு வகையான ருசி என்றால் தயிர் தான் அல்ட்டிமேட். கொஞ்சமும் புளிக்காத ருசியான கட்டி தயிர்.

அந்த வழியே செல்லும் நிறைய விஐபி க்கள் காலை சிற்றுண்டியோ மதிய உணவோ அங்கு தான் சாப்பிடுவார்கள்.

திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கும்பகோணத்தில் உள்ள பல உணவு விடுதிகளை விட பல மடங்கு தரமும் ருசியும்.

அடுத்தமுறை அந்தப்பக்கம் விசிட் செய்யும்போது ட்ரை செய்து பாருங்களேன்.

ஆனால் ஒன்றே ஒன்று. ஏனைய டெல்ட்டா பகுதியின் சிறிய உணவகங்கள் போல் இங்கும் நாம் சாப்பிட்ட இலையை நாமே தான் எடுத்து போட வேண்டும்.





Comments