ஆளுமை

 

ஜெயகாந்தன்


என் வாசிப்பு தளத்தை விஸ்தீரணம் செய்தவர். நான் பார்த்து பயந்து வியந்த ஒரே எழுத்தாளர்.
வியந்ததற்கு காரணம் அவரின் அபார எழுத்து. அதன் வீச்சு, நான் அவருக்கு முன்னும் பின்னும் எவரிடமும் பார்த்தறியாதது.
பயந்ததற்கு காரணம் அவரின் முறுக்கு மீசையும் ஆகிருதியும் அது ஏற்படுத்திய ஆளுமையும்.
அவரின் மீசைக்கும் பைப்புக்கும் குரலுக்கும் நான் ரசிகன்.
அவரின் குரல் இணையம் எங்கும் கொட்டிக் கிடக்கிறது யூ டியூப் ல்.
குரலைக் கேட்க ஆர்வமுள்ளவர்கள் EPRLF தலைவர் பத்மனாபா படுகொலைக்காக மார்க்ஸிஸ்ட் கட்சி நடத்திய அஞ்சலி கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையை கேட்கலாம்.
எவரொருவர் பேச்சிலும் அத்தகைய உண்மையையும் நேர்மையையும் காண முடியாது.
அவருடனான எனது ஆரம்ப காலப் பயணம் அலாதியானது.
கங்கை எங்கே போகிறாள்-ல் துவங்கி ரிவர்ஸில் போய் சில நேரங்களில் சில மனிதர்களைப் படித்துவிட்டு அக்னிப் பிரவேசத்தை இறுதியாக வாசித்தவன்.
இன்று வரை அவர் இடத்தில் எவரையும் வைக்க மனம் இடம் தருவதில்லை.
பாரதிக்குப் பின் நான் ரசிக்கும் மதிக்கும் ஒரே இலக்கியவாதி ஜெயகாந்தன் மட்டுமே.




Comments