லெஜண்ட் (2022)

சினிமா


லெஜண்ட் (2022)


பார்க்கணும் பார்க்கணும்னு ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்தேன்.
விஜயகாந்த் பட பாணி கதை தான். விஜய்காந்த் படம் போலவே காதல் காமெடி செண்டிமெண்ட் நாட்டுப்பற்று எல்லாமும் இருக்கிறது. கூடவே எம் ஜி ஆர் போலவே இமேஜ் க்ரியேட் பண்ணும் முயற்சி. அதாவது ரொம்ப நல்லவன் காரெக்டர் கட்டமைப்பு.
சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிக்கு டிரக் மாபியா கொடுக்கும் இன்னல்களை மீறி அவர் எப்படி மருந்து கண்டுபிடித்து எதிரிகளிடம் மாட்டிக்கொண்டு பின் அவர்களை ஒழித்து மருந்தை மக்க்ளிடம் கொண்டு சேர்க்கிறார் என்பது தான் முழு நீள படம்.
கதையை படமாக்கியிருக்கும் விதம் மற்றும் டயலாக்குகளில் எல்லாம் பெரிய குறைகள் இல்லை. ரசிக்கலாம்.
ரசிக்கமுடியாதது என்றால் லெஜண்ட் டுக்கு வைத்திருக்கும் க்ளோசப் மற்றும் ஸ்லோ மோஷன்கள் தான். சகிக்கலை.
விவேக் பாதி படம் வரை வருகிறார். நகைச்சுவை ரசிக்கும்படியாக எல்லாம் இல்லை.
படம் ஒரு மாதிரி பரவாயில்லை ரகம் தான். தூக்கம் வரவில்லை. 😜

பிகு:
படம் பார்த்து முடித்தது முதல் ஒரே சர்க்கரை வியாதி டாக்டர்களும் மருந்துகளுமாய் ஏகப்பட்ட விளம்பரங்கள் டிவியிலும் என் மொபைலிலும் வந்துகொண்டே இருக்கிறது. பயமாய் இருக்கிறது.




Comments