வெப்சீரீஸ் - அனந்தம் 1951 (2022)
வெப்சீரீஸ்
The Kashmir Files, RRR, KGF CH 2 ஆகியவைகளை அடுத்தடுத்த வாரங்களில் பார்த்து முடித்த கையோடு நேற்று மாலை முதல் இதோ இப்போது முடிய ஏக் தம்மில் ‘அனந்தம் 1951’ 9 எபிஸோடுகளையும் பார்த்து முடித்தேன்.
~
அதில் வாழ்ந்த ரத்தம் சதைகளுடனான மனிதர்கள், அவர்களின் வாழ்வியல், உணர்வுகள், கோபம், பாசம், காதல், பகை எல்லாவற்றையும் ஸைலண்ட்டாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மௌன சாட்சி.
அதில் வாழ்ந்த வாழும் மனிதர்களின் வாழ்வை நினைவாய் தாங்கி நிற்கும் நினைவாலயம்.
அனந்தம் அப்படிப்பட்டஒரு வீடு தான்.
1951 முதல் பல்வேறு காலகட்டங்களில் அதில் குடியிருந்தவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்களை ஒவ்வொரு எபிஸோடாக சொல்லிக் கொண்டு வருகிறது.
கலகலப்பாகவும் உணர்ச்சிக் கோர்வைகளாகவும் ஒவ்வொரு எபிஸோடையும் கொண்டு செல்கிறார்கள் வெப்சீரீஸ் படைப்பாளர்கள்.
கிட்டத்தட்ட கே. பாலச்சந்தர் பாணியில் பெரும்பாலான TAMBRAHM கேரக்டரைசேஷன்களும், நாடக பாணி கதை சொல்லும் யுக்தியும் பளீச்சென சிரீஸ் பார்க்கும்போது தெரிகிறது.
சுஹாஸினி மணிரத்னம் மற்றும் ஓரளவு வஸந்த் டச்சஸ் சீரீஸ் முழுக்க நிறையவே தென்படுகின்றன.
கே. பாலச்சந்தர் போலவே கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான டாபிக் ஒன்று சிரீஸின் மையத்திற்குள் நுழைந்து பார்வையாளர்களை திடுக்கிட வைக்கிறது.
அனேகமாக இந்த டாபிக் நான் பார்த்த வரை ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.
அந்த சப்ஜெக்ட்டுடன் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ கதையின் ஊடாக அதை நகர்த்தி செல்லும் பாங்கு நமக்கு சப்ஜெக்டின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
பொறுமையாக பார்க்க கூடிய ரசிகர்களுக்கு ‘அனந்தம் 1951’ நன்கு பிடிக்கக் கூடும்.
~
‘அனந்தம்’ போலவே எனக்கும் ஒரு வீடு உண்டு. என் அத்தனை உணர்வுகளையும் உள்வாங்கி கொண்டு அதற்கு சாட்சியாக இன்னமும் நின்று கொண்டிருக்கிறது.



Comments
Post a Comment