அஞ்சலி - சிங்கப்பெண்ணே
அஞ்சலி
~
A TRIBUTE TO MY GRANDMA
~
எனது தாயாரின் தாயார், அதாவது எனது பாட்டி அவர்களின் வாழ்க்கை அற்புதமானது. பதினேழு வயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, பதினெட்டு வயதில் எனது அம்மா பிறந்து, பத்தொன்பது வயதில் தாத்தா இறந்து விதவையானவர்.
தனது தந்தை வீட்டுக்கு வந்த சிறிது நாட்களிலேயே தந்தையையும் பறிகொடுத்து, சோர்ந்து, வீழ்ந்து விடாமல் பள்ளி இறுதி தேர்வு எழுதி, இசை பயின்று, தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அப்போது நகரில் கிருத்துவ மிஷனரி ஒன்றினால் புதிதாகத் துவக்கப்பட்ட பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியை ஆனார்.
மிக சொற்ப ஊதியம். ஊதியம் போதாமல் தனியே வீடுகளுக்கு சென்று இசை வகுப்புகள் நடத்தி அதன் மூலமும் வருவாய் ஈட்டி தனது தம்பிகளைப் படிக்க வைத்து, தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்து எனது அன்னையை வளர்த்து, தனது வயதான தாயையும் காப்பாற்றினார்.
மனைவியை இழந்த ஒரு ஆணினால் இதை எல்லாம் செய்வது மிகவும் கடினம். பெண்களுக்கு இயற்கையிலேயே நெஞ்சுரம் அதிகம். எனது பாட்டி தனது எண்பத்து ஏழாவது வயது வரை தன் வேலைகளைத் தானே செய்து கொண்டு, குழந்தைகளுக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டு, ஒரு அற்புதமான வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து மறைந்தார்.
சிங்கப்பெண்ணே
~
🙏


Comments
Post a Comment