இசை - T.M. சௌந்தர்ராஜன் - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..

இசை - T.M. சௌந்தர்ராஜன் - நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..

TMS என்றதும் என் நினைவில் நிற்கும்  பாடல்களை  வரிசை இட துவங்கினால் பட்டியலில் முதலில் ஓடி வருவது 

- 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி' - 

தீபம் படத்தில் வரும் பாடல் தான். ஜானகியுடன் TMS. என்ன ஒரு காம்போ. TMS இன் கணீர் ஆண்குரலும், ஜானகியின் மெல்லிய பெண்மைக் குரலும். அப்பப்பா, அற்புதம். 

அந்த பாடலின் சரணத்தில் வரும் 'தங்க வண்ணக் கழுத்துக்கு தங்க மாலை... சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை... சான்சே இல்லை. அதுவும் அந்த பாடல் இறுதியில் வரும் 'ஆராரிரோ....' ஹம்மிங்,  அப்பப்பா  என்ன ஒரு ஆனந்தம். !!  ஆரம்ப கால இளையராஜா புகுந்து விளையாடியிருப்பார் அந்த பாடலில். 
 
TMS - ஜானகி இணை அதன் பின்னர் எனக்கு மிகவும் பிடித்த இணை ஆனது. 
 
பின்னர் வெளிவந்த 'தியாகம்' படத்தில் இடம் பெற்ற 'தேன்மல்லிப் பூவே' மற்றுமொரு அற்புதப் பாடல். அதிலும் சரணம் மிகப் பிரமாதமாக இருக்கும். 
 
TMS - ஜானகி பாடலை பின்னர் தேடித் தேடி ரசிக்கத் துவங்கினேன். 
 ~

இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம் 

நல்ல வாழ்வு வந்தது - எல்லாம் அவளே 

காதலின் பொன் வீதியில் - பூக்காரி 

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி - பட்டாம்பூச்சி 
 ~
இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்கள் பலவற்றை பாடிய TMS அவர்கள் ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் இசையில் பாடுவது நின்று போனது. அது ஏன் என்று தெரியவில்லை. 

அவர்கள் பிரியாமல் இருந்திருந்தால் மேலும் பல நல்ல பாடல்கள் தமிழுக்கு கிட்டியிருக்கும். துரதிர்ஷ்டம். வேறு என்ன சொல்வது..? 
 
இளையராஜா இசையில் TMS பாடிய சில அருமையான பாடல்கள் :
 ~

அன்னக்கிளி உன்னைத் தேடுதே - அன்னக்கிளி 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம் 

நேரமிது நேரமிது - ரிஷிமூலம் 

ஐம்பதிலும் ஆசை வரும் - ரிஷிமூலம் 

எந்தன் பொன் வண்ணமே -நான் வாழ வைப்பேன் 

சிந்து நதிக்கரை ஓரம் - நல்லதொரு குடும்பம் 

அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆலயம்
~

Comments