வானம் வசப்படும் - Tamil (2004)
சினிமா
வானம் வசப்படும் - Tamil (2004)
~
வானம் உயரம்....
சிறகின் உயரம்...
~
❤️
அற்புதமான இந்த பாடலுக்கு இசை அமைத்தது மகேஷ். இவரை கொஞ்ச நாட்களுக்கு முன் நினைவு கூர்ந்திருந்தேன். நண்பர்களுக்குத் தெரியும்.
இந்த பாடல் இடம் பெற்ற படம் "வானம் வசப்படும்". P.C. ஸ்ரீராம் இயக்கத்தில் 2004 இன் துவக்கத்தில் வெளிவந்தது.
அமரர் சுஜாதா எழுதிய " இருள் வரும் நேரம்" கதை தான் "வானம் வசப்படும்".
இரு பதின்வயது விடலை யுவன்களால் ஆக்ஸிடெண்ட்டலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட, புதிதாக திருமணம் ஆன ஒரு பெண்ணின் துயரம் தான் கதை.
வழக்கமான சுஜாதா கதை முடிவு போல் அழகான ஒரு ட்விஸ்ட். பொயட்டிக்.
P.C. நன்றாகத் தான் வழஙகியிருந்தார். ஏனைய பிறர் சுஜாதா கதைகளை சொதப்பியது போல் செய்ய்வில்லை. இருந்தாலும் Box Office இல் படம் தோல்வி அடைந்தது.
ஆனாலும் இப்படம் ஒரு புதுமையான முயற்சியின் ஆரம்பம் என்ற பெருமை பெற்ற படமானது.
முழுக்க முழுக்க பிலிமை பயன்படுத்தாமல் digital technology பயன்படுத்தியிருந்தார் P.C. ஸ்ரீராம். இன்றைய தொழில்நுட்பத்தின் ஆரம்பப் புள்ளி இந்த படம் தான்.
இந்தியாவின் முதல் HD படம். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டது. இதனாலேயே அன்று இந்த வசதி இல்லாத பெரும்பாண்மை திரை அரங்குகளில் இப்படம் திரை இடப்பட முடியாமல் பலர் பார்க்காமலேயே பெட்டிக்குள் முடஙகிப் போனது.
மகத்தான சோகம்.
இணையத்தில் கிடைத்தால் ஒருமுறை பாருஙகளேன்.
~



Comments
Post a Comment