இசை - Retro Music - 1985

இசை

Retro Music - 1985
 
1985ல் வெளிவந்த இனிமையான சில பாடல்களையும் அவை இடம்பெற்ற படங்களின் விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம். 
~

சென்ற சில ஆண்டுகளுடன் 1985 ஐ ஒப்பிடும்போது, இளையராஜாவை தவிர மற்ற இசையமைப்பாளர்களின் இசை அமைப்பில் வெளிவந்த பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை. 

பொதுவான இசை ரசிகர்களுக்கு இது வருத்தமான செய்தி தான்.
~

1985ல் கிட்டத்தட்ட 135 படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையாக, அதாவது 45 படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இவர் இசையமைப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பாடல்களை கடைசியாக  பார்க்கலாம். 
~

அவருக்கு அடுத்தபடியாக சங்கர் கணேஷ் இரட்டையர்கள் 32 படங்களுக்கும், கங்கை அமரன் 17 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்கள்.

சங்கர் கணேஷ் இசை அமைப்பில் ஆண்டவன் சொத்து, அந்தஸ்து, ஜான்சிராணி, செயின் ஜெயபால் போன்ற பல படங்கள் வெளிவந்தாலும் ஹிட் பாடல்கள் ரொம்ப சொற்பமே.

பந்தம் பாச பந்தம் - பந்தம் 
சொர்க்கத்தின் வாசல் - மங்கம்மா சபதம் 

அவ்வளவு தான் எனக்கு தெரிந்து. அதிலும் கூட மங்கம்மா சபதம் பாடல் பப்பி லஹிரியின் ஹிந்தி பாடலின் அப்பட்டமான தழுவல்.
~

கங்கை அமரன் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த வாழ்வே மாயம், சட்டம் ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு கற்பூர தீபம், இரண்டு மனம், நாம் இருவர் உட்பட 17 படங்களுக்கு இசையமைத்தும் பெரிய ஹிட் என்று எதுவுமே இல்லை. 

நாம் இருவரில் மட்டும் "திருவிழா திருவிழா.. இளமையின் தலைமையில் ஒரு விழா" என்ற பாடல் சுமாராக இருந்தது. 
~

மெல்லிசை மன்னர்  1984ம் ஆண்டை போலவே கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். அவ்வளவு தான். 

நவகிரக நாயகி படத்தில் மட்டும் சில பாடல்கள் நன்றாக இருந்தன. MSV இசையில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல் "சுகமான ராகங்கள்" படத்தில் இடம்பெற்ற "ஆத்தை கடக்க வேணும்.. அக்கரைக்கு போக வேணும்..".  
~

ஏறக்குறைய தெலுங்கில் செட்டில் ஆகிவிட்ட கே.வி. மகாதேவன் இந்த ஆண்டில் மூன்று  தமிழ் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். 

மருவத்தூரின் வளர் மரகதமே - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி 

அடி ரங்கநாதன் தங்கச்சி - சமயபுரத்தாளே சாட்சி 

அவ்வளவு தான் திரை இசை திலகத்தின் பங்களிப்பு.
~

காற்றுக்கென்ன வேலி மூலம் பரபரப்பாக பேசப்பட்ட சிவாஜி ராஜா "சித்திரமே சித்திரமே", "ராமன் ஸ்ரீராமன்" என்று இரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாடல்கள் எதுவும் நினைவில் இல்லை. 
~
T ராஜேந்தர் மற்றும் VS நரசிம்மன் தலா இரு படங்களுக்கும், GK வெங்கடேஷ் ஒரு படத்துக்கும் இசை அமைத்திருக்கின்றனர். 

ராஜேந்தர் இசையில் "உனக்காக ஒரு ரோஜா" படத்தின் "ஒரு மோக ராகம்.." நல்ல டூயட் என்றால் யேசுதாஸின் குரலில்  "ஒரு புல்லாங்குழல் ஊமையானது" பாடல் அருமையான காதல் தோல்வி பாடல். 
~

1985ம் ஆண்டில் லக்ஷ்மிநாராயணன் என்பவர் அறிமுக இசையமைப்பாளராக "கல்யாணம் ஒரு கால்கட்டு" என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை இசை சமூகத்தில் இணைந்தார். ஆனால் பாடல்கள் எதுவுமே ஹிட் ஆனதாக தெரியவில்லை.
~

பதிவின் முக்கியமான கட்டத்துக்கு வந்துவிட்டோம்.  இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல்களை பார்க்கலாம். 

என்னை பாட சொல்லாதே 
குயிலே குயிலே - ஆண்பாவம் 

நீயா அழைத்தது - அலை ஓசை 
சிறிய பறவை சிறகை விரித்து - அந்த ஒரு நிமிடம் 
சிட்டுக்குருவி வெட்கப்படுத்து - சின்ன வீடு 

ஒரு ஜீவன் அழைக்குது 
மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி 

கூட்டத்திலே கோவில் புறா 
பாட்டு தலைவன் பாடினால் 
யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ - இதயக்கோவில் 

கண்மணியே  பேசு 
வானிலே தேன் நிலா - காக்கி சட்டை 

சுகராகமே - கன்னிராசி 
நிலவு தூங்கும் நேரம் - குங்கும சிமிழ் 

பூங்காற்று திரும்புமா 
வெட்டிவேரு வாசம் 
ராசாவே உன்னை நம்பி - முதல் மரியாதை 

பொன்மானே சங்கீதம் பாட வா - நான் சிகப்பு மனிதன் 
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி 
பொன் மானே கோபம் ஏனோ  - ஒரு கைதியின் டைரி 
ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் - படிக்காதவன் 

வைதேகி ராமன்
பூமாலையை ஏங்கும் இரு தோள்  சேரவா 
பூவிலே மேடை நான் போடவா - பகல் நிலவு 

ராஜா மகள் - பிள்ளை நிலா 
சின்னக்குயில் பாடும் - பூவே பூச்சூட வா 
மான் கண்டேன் மான் கண்டேன் - ராஜரிஷி 

நான் ஒரு சிந்து 
மனதில் உறுதி வேண்டும் 
கலைவாணியே  - சிந்துபைரவி 

ஆடல் கலையே தேவன் தந்தது 
அழைக்கிறான் மாதவன் - ஸ்ரீ ராகவேந்திரர் 

தென்றல் வந்து என்னை தொடும்
கண்மணி நீ வர காத்திருந்தேன்
புதிய பூவிது - தென்றலே என்னை தொடு 

தேனே தென்பாண்டி மீனே 
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
பாடு நிலாவே - உதயகீதம் 

கண்ணில் என்ன கார்காலம் - உன் கண்ணில் நீர் வழிந்தால் 
எங்கே என் ஜீவனே - உயர்ந்த உள்ளம் 
~

1985ல் கிட்டத்தட்ட 45 படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இசை ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. காலத்தை கடந்து நிற்கும்  ஹிட் பாடல்களை அவர் இந்த ஆண்டிலும் நமக்கு ஏராளமாக வழங்கியிருக்கிறார். 

திரை இசைக்கான தேசிய விருதினையும் சிந்து பைரவி மூலம் பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். 

அவரின் பாடல்கள் அன்றும் இனிமை. இன்றும் இனிமை. என்றென்றும் இனிமை என்றும் சொல்லலாம். 

HATS OFF TO RAJA 
~

1985ம் ஆண்டின் சிறந்த  மூன்று பாடல்களை என் விருப்ப பாடல்களாக குறிப்பிடும் பத்திக்கு வந்துவிட்டோம். 

எனக்கு பிடித்த அந்த 3 பாடல்கள் இதோ :

கண்ணில் என்ன கார்காலம் - உன் கண்ணில் நீர் வழிந்தால் 

மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி 

மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி 

மூன்றாவதாக குறிப்பிட்ட  கீதாஞ்சலி பட பாடலில் சற்றே குரலை தாழ்த்தி மென் குரலில் பாடும் இளையராஜாவின் அந்த ஸ்டைல் ஆஹா... அற்புதம். 

பாடல் வரிகள், முன்னிசை, இடையிசை, பாடல் அமைந்த மோகன ராகம், உடன் பாடும் சித்ரா வின்  இனிய குரலிசை எல்லாமும் கலந்து அந்த ஆண்டின் மிக உன்னத பாடலாக "மலரே பேசு மௌன மொழி" பாடல் அமைகிறது. 
~
சுபம்

Comments