இசை - Retro Music 1983
இசை
1983
1983ல் வெளிவந்த இனிமையான சில பாடல்களையும் அவை இடம்பெற்ற படங்களின் விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.
~
1981 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளை போலவே 1983 லும் தமிழ் திரை இசையில் இளையராஜா, சங்கர் கணேஷ் மற்றும் மெல்லிசை மன்னர் MSV ஆகியோரின் ஆளுமையே நிறைந்திருந்தது. இந்த ஆண்டில் வெளிவந்த மொத்த படங்களில் ஏறக்குறைய 90% திரைப்படங்களுக்கு இம்மூவர் தான் இசை அமைத்திருக்கின்றனர்.
அதிகபட்சமாக இந்த முறை இளையராஜா இசை அமைத்த 32 படங்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு அடுத்த இடத்தில் சங்கர் கணேஷ் 23 படங்களுக்கும், மெல்லிசை மன்னர் 16 படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளை போலவே இந்த ஆண்டிலும் தான் இசை அமைத்த படங்களில் இடம்பெற்ற பெருவாரியான பாடல்களை ஹிட் செய்திருக்கிறார் இளையராஜா.
முதலில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் சிலவற்றை பார்க்கலாம்.
~
1. ஆனந்த கும்மி :
ஒரு கிளி உருகுது
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
ஓ வெண்ணிலாவே...
திண்டாடுதே ரெண்டு கிளிகள்
2. ஆயிரம் நிலவே வா :
தேவதை இளம்
கங்கை ஆற்றில் நின்று கொண்டு...
3. அடுத்த வாரிசு :
ஆசை நூறுவகை
பேசக்கூடாது
4. இளமைக் காலங்கள் :
இசை மேடையில்
பாட வந்ததோ..
ராகவனே ரமணா ரகு ராமா...
ஈரமான ரோஜாவே...
5. இன்று நீ நாளை நான்
தாழம்பூவே கண்ணுறங்கு
பொன்வானம் பன்னீர் தூவும்....
6. கண் சிவந்தால் மண் சிவக்கும் :
மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்...
7. கொக்கரக்கோ
கீதம் சங்கீதம்...
8. மலையூர் மம்பட்டியான்
சின்ன பொண்ணு சேலை
9. மண்வாசனை
பொத்தி வெச்ச
ஆனந்த தேன் சிந்தும்...
10. மெல்ல பேசுங்கள்
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
11. முந்தானை முடிச்சு
அந்தி வரும் நேரம்...
விளக்கு வெச்ச நேரத்துல...
12. ஒரு ஓடை நதியாகிறது :
தலையை குனியும் தாமரையே...
தென்றல் என்னை முத்தமிட்டது...
13. பாயும் புலி :
ஆடி மாச காத்தடிக்க
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
14. ராகங்கள் மாறுவதில்லை
விழிகள் மீனோ ...
15. சலங்கை ஒலி :
மௌனமான நேரம்
நாத விநோதங்கள்
தகிட ததிமி
ஓம் நமசிவாயா ...
வேதம்..அணுவிலும்...
16. தங்கமகன் :
ராத்திரியில் பூத்திருக்கும்
வா வா பக்கம் வா
17. தூங்காதே தம்பி தூங்காதே :
நானாக நானில்லை தாயே
சும்மா நிக்காதீங்க
வானம் கீழே வந்தாலென்ன
18. வெள்ளை ரோஜா :
தேவனின் கோவிலிலே
ஓ மானே மானே மானே
சோலை பூவில் மாலை தென்றல் ...
~
மூச்சு வாங்குது இளையராஜாவின் இந்த ஆண்டு ஹிட் பாடல்களில் சிலவற்றை மட்டும் வரிசைப்படுத்த.
விடுபட்ட பாடல்கள் இன்னமும் ஏராளம். கமெண்டில் குறிப்பிடலாம் நண்பர்களே.
ராஜா ராஜா தான்.
~
அடுத்து சங்கர் கணேஷ் இசை அமைத்து வெளிவந்த சில பாடல்களை பார்க்கலாம்.
1983ல் சங்கர் கணேஷ் இரட்டையர் கிட்டத்தட்ட 23 படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் அவர்கள் இசையில் வெளிவந்த பாடல்களில் ஹிட் ஆனவை 23 படங்களின் எண்ணிக்கை அளவுக்கு கூட இருக்குமா என்று தெரியவில்லை. சடாரென்று ஒரு செங்குத்தான இறக்கம்.
1. நெஞ்சமெல்லாம் நீயே
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...
(இது ஒரு கஜல் பாடலின் தழுவல்) வாணியின் குரலில் உண்மையாகவே நெஞ்சள்ளி போனது இந்த பாடல்.
2. சாட்சி
மலர் மஞ்சங்கள்..மகரந்தங்கள்...
3. தாய்வீடு
ஆசை நெஞ்சே நீ பாடு.. அண்ணன் வந்தான் தாய்வீடு.
(பப்பிலஹரியின் ஹிந்தி பாடலின் அப்பட்டமான தழுவல்.)
4. சுபமுகூர்த்தம்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
உண்மையிலேயே மிக அருமையான பாடல்.
நான்காவதாக சொன்ன பாடலில் தான் சங்கர் கணேஷ் தெரிகிறார்.
~
மெல்லிசை மன்னரும் கூட 1982ல் கொடுத்தது போல மிகப்பெரிய ஹிட் எதுவும் இந்த ஆண்டு கொடுக்கவில்லை. அவர் ரசிகர்கள் கூட ஒப்புக்கொள்ளும் வருத்தமான உண்மை இது.
அவரின் இசையில் வெளிவந்து ஹிட் ஆன சில பாடல்களை பார்க்கலாம்.
1. டௌரி கல்யாணம் --- ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
2. மிருதங்க சக்கரவர்த்தி :
சுகமான ராகங்களே...
அபிநய சுந்தரி ஆடுகிறாள்....
3. சந்திப்பு --- இது ஆனந்தம் விளையாடும் வீடு
4. சரணாலயம் --- எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை ...
5. சிகப்பு சூரியன் --- தங்கச்சி சிரிச்சாளே....
அவ்வளவு தான். டாட்.
~
டி. ராஜேந்தர் இந்த ஆண்டு இரண்டு படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். அவற்றில் மிக பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் கேட்டகிரியில் சேர்கின்றன.
1. தங்கைக்கோர் கீதம் :
தினம் தினம் உன் முகம் ...
பகலென்றும் இரவென்றும்...
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி....
2. உயிருள்ளவரை உஷா
இந்திரலோகத்து சுந்தரி...
என்னாடி பந்தாடும் பாப்பாக்களா
இதயம் அதை கோயில் என்றேன்...
மோகம் வந்து தாகம் வந்து....
என்று பாடல்கள் ஹிட்டானாலும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல் என ராஜேந்தருக்கு பெருமை சேர்த்த பாடல் "வைகை கரை காற்றே நில்லு..." பாடல் தான்.
இரவு நேரங்களில் அமைதியான சூழலில் இந்த பாடல் கேட்கும்போது நினைவுகள் எங்கெங்கோ சென்று விடும், இப்போதும்.
~
1983ல் மிக சொற்பமான படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருந்த போதிலும் அப்படங்களில் நல்ல ஹிட் கொடுத்த இசை அமைப்பாளர்களில் கங்கை அமரனும் ஒருவர். கடந்த ஆண்டு அவரை உச்சத்திற்கு அழைத்து சென்ற "வாழ்வே மாயம்" அலை இந்த ஆண்டும் தொடர்ந்திருக்கிறது அவருக்கு.
1.இமைகள் --- மாடப்புறாவோ.. மஞ்சள் நிலாவோ..
2. நீதிபதி --- பாசமலரே.. அன்பில் விளைந்த...
3. சட்டம்
வா வா என் வீணையே
அம்மம்மா சரணம் சரணம்
ஒரு நண்பனின் கதை இது
நண்பனே எனது உயிர் நண்பனே ...
சட்டம் படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான்.
~
1983ல் மற்ற இசை அமைப்பாளர்களின் ஹிட் பாடல்கள் சிலவற்றையும் பார்க்கலாம்.
1. ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது --- பாஞ்சாலி இவளா .. ( ஷ்யாம் )
2. கோடுகள் இல்லாத கோலங்கள் ---
பூ மலரும் ( D தேவராஜன்)
3. தூங்காத கண்ணென்று ஒன்று --- இதயவாசல் திறந்தபோது
( K V மகாதேவன்)
4. காஷ்மீர் காதலி : (GK வெங்கடேஷ்)
சங்கீதமே என் தெய்வீகமே
அழகிய செந்நிற வானம்
5. துடிக்கும் கரங்கள் :
( SP பாலசுப்ரமணியன்)
அடடா இது தான்
சந்தனம் பூசும்
மேகம் முந்தானை
மேலே குறிப்பிட்டவர்களில் GKV & SPB சுவீட் சர்ப்ரைசஸ்.
~
பதிவின் கடைசி பத்திக்கு வருகிறேன். 1983ம் ஆண்டு வெளிவந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் :
1. தென்றல் என்னை முத்தமிட்டது --- ஒரு ஓடை நதியாகிறது -- இளையராஜா
ராஜாவின் ராஜ ராகத்தில், மலயமாருதத்தில் அமைந்த, அற்புதமான பாடல் இது. இந்த பாடலை மேலும் லைவ்லியாக்கியிருப்பது பாடலை பாடிய கிருஷ்ணசந்திரனும், சசிரேகாவும். மனசை வருடும் பாடல்.
2. விழிகள் மீனோ --- ராகங்கள் மாறுவதில்லை -- இளையராஜா
கல்யாணி ராகம். ஆஹா.. SPB யின் குரல் பாலமுரளி கிருஷ்ணாவை நினைவுபடுத்துகிறது. KVM பாணியில் அமைந்த சுத்தமான கர்நாடக சங்கீதம் இந்த பாடல்.
3. நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி --- சுபமுகூர்த்தம் -- சங்கர் கணேஷ்
சங்கர் கணேஷ் அவ்வப்போது சத்தம் போடாமல் சாதித்து காண்பிப்பர். அப்படியான பாடல்களில் இப்பாடலும் ஒன்று.
~
சுபம்


Comments
Post a Comment