இசை - Retro Music - 1981

இசை 

1981


1981 இல் மனம் மயக்கிய பாடல்கள் :

1981 ஆம் ஆண்டும்,  முந்தைய சில ஆண்டுகள் போல மெல்லிசை மன்னர், இசை  ஞானி இளையராஜா மற்றும் சங்கர் கணேஷ் ஆகியோரின் இசை ஆதிக்கத்தில் தான் இருந்தது.

இருந்தபோதும் GK . வெங்கடேஷ், சந்திரபோஸ், வி.குமார் மற்றும் ராஜேந்தர் ஆகியோரும் சில படங்களுக்கு இசை அமைத்திருந்தனர்.

இந்த ஆண்டில் T. ராஜேந்தர் தனது இயக்கத்தில் அல்லாது பிறர் படங்களுக்கும் பாடல்கள் மற்றும் இசை பொறுப்பினை ஏற்கத் துவங்கினார். அவ்வாறான அவரின் முதல் படம் 'கிளிஞ்சல்கள்'. துரை இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் பாடல்கள் அத்தனையும் அருமை.

1. விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் ....

2. அழகினில் விளைந்தது ..

3. சின்ன சின்ன கண்ணா ....

இது தவிர அவரின் இயக்கத்தில் வெளிவந்த 'ரயில் பயணங்களில்' படத்துக்கும் பல பொறுப்புகளுடன் பாடல்கள் எழுதி இசையும் அமைத்திருந்தார்.

1. வசந்தம் பாடி வர ..

2. வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

3. நூலும் இல்லை வாலும் இல்லை

பாடல்களில் சற்று மிகை வர்ணனைகள், சந்தத்தை மீறிய சொற்கோர்வைகள் இருப்பினும் சாதாரண பாமர சினிமா ரசிகனை பாடல் முனுமுனுக்க வைத்த பெருமை ராஜேந்தரையே சேரும். இசையின் பரிமாணங்களை முறைப்படி கற்காமல் கற்பனையின் வளமையால் வாயிலேயே மெட்டமைத்து பாடல்களை ஹிட்டடிக்க வைத்த கெட்டிக்காரர் அவர்.

மெல்லிசை மன்னர் இந்த ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையில் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் .

அவரின் இசையில் சில ஹிட் பாடல்கள் :

1. மான் கண்ட சொர்க்கங்கள் - 47 நாட்கள்

2. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள்

3. தென்றலது உன்னிடத்தில் சொல்லி வித்தை - அந்த ஏழு நாட்கள்

4. வளர்த்த கடா - கல்தூண்

5. கடவுள் நினைத்தான் - கீழ்வானம் சிவக்கும்

6. கண்கண்ட தெய்வமே - கீழ்வானம் சிவக்கும்

7. தலைவி, தலைவி - மோகன புன்னகை

8. சொன்னால் தானே தெரியும் - ராணுவ வீரன்

9. ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு

10. கண்ணான பூமகனே - தண்ணீர் தண்ணீர்

1980 ஐவிட 1981 இல் மெல்லிசை மன்னர் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. தனது பாணியை விட்டுவிடாமல், அதே நேரத்தில் கடுமையான போட்டிகளையும் சமாளித்து தாக்கு பிடித்து வந்தார் என்றே கூறலாம்.

இந்த ஆண்டும் சங்கர் கணேஷ் இரட்டையர்களுக்கு ஏறுமுகம் தான். நிறைய படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். நிறைய நல்ல பாடல்களையும் வழங்கியிருந்தனர்.

1. முத்து முத்து ... - ஆணிவேர்

2. கடலோடு நதிக்கென்ன கோபம் - அர்த்தங்கள் ஆயிரம்

3. கடலில் அலைகள் பொங்கும் - மகரந்தம்

4. சித்திரமே உன் விழிகள் - நெஞ்சிலே துணிவிருந்தால்

5. பணியும் நானே மலரும் நீயே - பனி மலர்

6. மேகமே மேகமே - பாலைவனச் சோலை

7. ஆளானாலும் ஆளு - பாலைவனச் சோலை

8. தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை

9. ரெண்டு கண்ணும் சந்தன கிண்ணம் - சிகப்பு மல்லி

10. கொஞ்சம் ஒதுங்கு - வசந்த காலம்

நிஜமாகவே சங்கர் கணேஷ் இந்த ஆண்டில் அற்புதமான பல பாடல்களை வழங்கியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 'கடலோடு நதிக்கென்ன கோபம்' மற்றும் 'கடலில் அலைகள் பொங்கும்' ஆகியவை மிக உயர்ந்த மெலடி மெட்டுகளில் அமைந்து இதயத்தில் நீங்கா இடம் பிடித்தன.

மேகமே, மேகமே ஒரு கஜல் பாடலின் தழுவல் என்ற போதிலும் தமிழில் ஒரு தரமான முயற்சி. வாணி ஜெயராம் என்ற அற்புத பாடகியின் திறமையை சங்கர் கணேஷ் திறமையாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஆடுகள் நனைகின்றன மற்றும் தரையில் வாழும் மீன்கள் ஆகிய படங்களுக்கு சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.

அதில் 'தரையில் வாழும் மீன்கள்' படத்தில் 'மழைக்கால மேகம்' என்று ஒரு பாட்டு நினைவில் இருக்கிறது. வாணி ஜெயராம் பாடியிருப்பார்.

அடுத்து - வேறு யார், நம் இளையாராஜா தான்.

அலைகள் ஓய்வதில்லை

ஆராதனை

பால நாகம்மா

எனக்காக காத்திரு

எல்லாம் இன்ப மயம்

கர்ஜனை

கழுகு

கரையெல்லாம் செண்பகப்பூ

இன்று போய் நாளை வா

கடல் மீன்கள்

கோவில்புறா

மீண்டும் கோகிலா

நண்டு

நெற்றிக்கண்

பன்னீர் புஷ்பங்கள்

ராஜ பார்வை

சங்கர்லால்

டிக் டிக் டிக்

விடியும் வரை காத்திரு

-- ஹிட் பாடல்களை பட்டியலிடத் தொடங்கினால் நேரம் போதாது. என் மனம் கவர்ந்த சில பாடல்களை மட்டுமே கீழே கொடுக்கிறேன்.

1. ஒரு குங்கும செங்கமலம் - ஆராதனை

2. இளம் பனி துளி விழும் - ஆராதனை

3. ஒ நெஞ்சமே - எனக்காக காத்திரு

3. பனி மழை விழும் - எனக்காக காத்திரு

5. கூந்தலிலே மேகம் வந்து - பால நாகம்மா

6. நீங்காத எண்ணம் ஒன்று - விடியும் வரை காத்திரு

7. நேற்று இந்த நேரம் - டிக் டிக் டிக்

8. கஸ்துரி மான் ஒன்று - சங்கர்லால்

9. ஆனந்த ராகம் - பன்னீர் புஷ்பங்கள்

10. கோடைக்கால காற்றே - பன்னீர் புஷ்பங்கள்

11. பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்

12. மஞ்சள் வெயில் - நண்டு

13. அள்ளித் தந்த வானம் - நண்டு

14. ராதா ராதா நீ எங்கே - மீண்டும் கோகிலா

15. ஹே ஓராயிரம் - மீண்டும் கோகிலா

16. காதல் என்னும் கோவில் - கழுகு

17. அழகே அழகு தேவதை - ராஜ பார்வை

18. காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை

19. வேதம் நீ - கோவில் புறா

20. அமுதே தமிழே - கோவில் புறா

ராஜா ராஜா தான். முப்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த பாடல்கள் நெஞ்சில் நிலைத்து நிற்பதை எண்ணி எண்ணி வியக்கிறேன்.

அவர் இசை ஞானத்தைப் பற்றி எழுத எனக்கெல்லாம் அருகதை இல்லை. ஒரு ஓரமாக உட்கார்ந்து மனம் கனக்கும் வேளைகளில் இந்த பாடல்களை எல்லாம் கேட்பேன்.
~

இந்த ஆண்டின் குறிப்பான வரவு என்றால் அது ஷியாம் தான்.

சென்னையில் பிறந்து வளர்ந்து மலையாள திரை இசை உலகில் வெற்றிக் கொடி நாட்டி, 'ஷியாமேட்டன்' என்று கேரளா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட  ஷியாம், மௌலி இயக்கிய  'வா இந்த பக்கம் ' படத்தில் இசை அமைத்திருந்த 'ஆனந்த தாகம்' பாடல் தான் 1981 இல் என்னுடைய பேவரிட் பாடல்.
~
சுபம்

Comments