அற்புதம் - Part-2
அற்புதம் - II
MIRACLE - II
(சென்ற பதிவின் தொடர்ச்சி)
அது வரை அமாவாசை என்பது மற்றொரு நாளாகவே இருந்த எனக்கு, அதிகாலை கனவு வந்த அந்த அமாவாசை நாள், நான் விரதம் இருந்த முதல் நாள் ஆனது.
சில நாட்கள் இக்கனவு குறித்து பேசினோம். பின்னர் மறந்தோம், மறுபடியும் அதே கனவு மீண்டும் வரும் வரை.
~
சில நாட்கள் கழித்து மீண்டும் அதே கனவு, அதே காகம்...
மனைவியிடம் கனவு குறித்து சொன்னேன். மறுபடியும் அதே பதிலை அவள் சொன்னாள், "இன்று அமாவாசை".
ச்சே, என்னடா இது, நமக்கு மட்டும் இது போல் ஒரு நிகழ்வு அடிக்கடி என்றவாறே போர்வையை உதறி எழுந்தேன். அந்த அமாவாசையும் விரதம் இருந்தேன்.
அன்று மாலை ஆன்மீக பெரியவர் ஒருவரை சந்தித்தேன். எல்லா விவரத்தையும் தெரிவித்தேன். எனக்கு ஏதும் புரியவில்லை. தாங்கள் தான் இதை தெளிவு படுத்த வேண்டும் என்றேன்.
அவர் தீர்க்கமாக என்னை பார்த்தார். உன் வயது என்ன என்றார். நாற்பத்தி நான்கு என்றேன். உன் தந்தையின் நிலை என்ன வென்று தெரிய வேண்டும் அவ்வளவு தானே என்றார். நானும் ஆம் என்றேன். ஒரு ஆண்டு பொறுத்திரு, பின்னர் சொல்கிறேன் என்றார். அது வரை மீண்டும் இக்கனவு எனக்கு வந்தால் என்ன செய்வது என்றேன். தெய்வத்தை நம்பு. அமாவாசை நாளன்று வீட்டளவில் விரதம் அனுஷ்டித்து கொள் என்றார்.
குழப்பமாய் வெளியே வந்தேன்.
~
நான் சொல்லப் போகும் அற்புதம் இனி தான் வரப்போகிறது.
(தொடரும்)
Comments
Post a Comment