சினிமா - MADHA - Telugu (2020)
சினிமா
~
MADHA - Telugu (2020)
சமீபகால தெலுங்கு படங்களில் மற்றொரு பரிட்சார்த்த புதிய முயற்சி "மாதா".
Mystery Thriller ஜானரை சேர்ந்த இந்த படம் நிறைய விருதுகள் பெற்றிருப்பதுடன் பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
இனி படம் எப்படி என்று பார்க்கலாம்.
~
நிஷா (த்ரிஷ்ணா முகர்ஜி) தாய் தந்தையை இழந்த ஒரு அனாதை. விளம்பர நிறுவனம் ஒன்றில் Proof Reader ஆகப் பணியாற்றும் அவள் மீது அர்ஜுன் (ராகுல் வெங்கட்) க்கு காதல் ஏற்படுகிறது. நிஷாவும் அவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள்.
ஆனால் நிஷாவை ஏமாற்றும் அர்ஜுன், அவள் மீது மனசமநிலை பிறழ்வு ஏற்பட்டவள் என்னும் ஒரு கருத்தை பிறரிடம் உருவாக்கிவிட்டு, ஒரு மனநல காப்பகத்தில் அவள் அட்மிட் செய்யப்பட காரணமாகிறான்.
மன நல காப்பகத்தில் அடைக்கப்படும் நிஷா அங்கு கொடூரமாக நடத்தப்படுகிறாள். அவள் உடலின் மீது drug abuse நிகழ்த்தப்படுகிறது.
யார் இவற்றையெல்லாம் செய்வது, அவர்களின் மோட்டிவ் என்ன? ஏன் நிஷா டார்கெட் செய்யப்பட்டாள் ? அவள் அந்த mental asylum இல் இருந்து எப்படி தப்பிக்கிறாள் ?
~
இவ்வளவு தான் படத்தின் கதை என்று அவ்வளவு ஈஸியாக படத்தை கடந்துவிட முடியாது.
படத்தில் நுணுக்கமாக சொல்லப்பட்டுள்ள உளவியல், விஞ்ஞான, மருத்துவ விவரங்களும், இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸமும் மூன்று கிளைகளாக படத்தை சீராக எடுத்துச் செல்கின்றது.
படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ் படத்தின் மையக்கருவான அந்த "மிஸ் இம்மியூனிட்டி".
த்ரிஷ்ணாவின் நடிப்பும், சாதாரண கதையை 'அட' என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் வித்தியாசமாக சொல்லிய படத்தின் டைரக்டர் ஸ்ரீவித்யா பஸவா வின் ப்ரெசெண்டேஷனும், ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான தடதடக்கும் பின்னனி இசையை படம் நெடுக சிறப்பாக வழங்கிய இசையமைப்பாளர் நரேஷ் குமரனும் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் எதிர்பாரா ட்விஸ்ட்டுகளுக்காகவும், மூன்று கிளைகளாக சொல்லப்பட்டுவரும் கதையை படத்தின் இறுதியில் இயல்பாக ஒன்றிணைக்கும் நேர்த்திக்காகவும் இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.
படத்தின் முக்கியமான காரெக்டரான ரவி வர்மா (அனிஷ் குருவில்லா) காரெக்டரை இன்னும் நன்றாக எஸ்டேபிளிஷ் செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அவர் தொடர்பான காட்சியமைப்புகள் படத்தின் கனத்தை இன்னமும் கூட்டியிருக்கக்கூடும்.
Mystery Thriller வகை படங்களுக்கு இருக்கவேண்டிய வேகம் படத்தில் இல்லாதது குறிப்பிடத்தக்க ஒரு மைனஸ். இத்தனைக்கும் படம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தான். ஆனால் ஏதோ மூன்று மணி நேரம் பார்த்தது போல் ஒரு ஃபீல் படம் பார்த்து முடியும்போது ஏற்படுகிறது.
நல்ல படங்களை தரக்கூடிய திறமையான ஒரு இயக்குனர் என ஸ்ரீவித்யா பஸவாவின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் படம் "மாதா".
MADHA - தரமான நல்ல முயற்சி


Nice
ReplyDeleteThanq 🙏
ReplyDelete