சினிமா- LEON THE PROFESSIONAL - French (1994)

சினிமா

LEON THE PROFESSIONAL - French (1994)

இந்தப் படத்தை பார்ப்பதற்கு தனது பதிவுகளின் மூலம் எனக்கு உத்வேகம் ஏற்படுத்திய Vadakkupatti Raamsami ஜிக்கு எனது நன்றி
~

Drug Enforcement Administration இல் corrupt Officer ஆன நார்மன் ஸ்டேன்ஸ்ஃபீல்ட் ஒரு கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஒட்டுமொத்த குடும்பம் ஒன்றை தனது படையை வைத்து காலி செய்கிறார். கிராஸரீஸ் கடைக்கு சென்ற 12 வயது மெட்டில்டா மட்டும் தப்பிப் பிழைத்து பக்கத்து ஃபிளாட்டில் தனியாளாக இருக்கும் லயானிடம் அடைக்கலம் ஆகிறார். 

தன்னை Cleaner என்று கூறிக்கொள்ளும் லயான் கூலிக்கு கொலை செய்யும் கொலையாளி. பிடிவாதமாக மறுக்கும் லயானை வற்புறுத்தி தனது அன்புத் தம்பியை கொலை செய்தவர்களைப் பழிவாங்க  தனக்கு கொலைத் தொழில் கற்றுத் தர வைக்கிறார் மெட்டில்டா. பதிலுக்கு லயானுக்கு எழ்தப் படிக்க கற்றுத் தருகிறாள்.
~

இந்த நேரத்தில் தந்தை வயதொத்த லயான் மீது மெடில்டா காதல் வயப்படுகிறாள். லயான் அவள் காதலை ஏற்றுக்கொண்டாரா ? தன் குடும்பத்தை அழித்த நார்மன் ஸ்டேன்ஸ்ஃபீல்டை மெட்டில்டா பழி தீர்த்தாளா என்பதை ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு தேவைப்படுவதைவிட அதிக  விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார் இயக்குநர் Luc Besan.
~

லயான் மீது மெட்டில்டாவுக்கு ஏற்படும் அடலஸண்ட் பருவ காதலை கத்தி மேல் நடப்பது போல் லாவகமாக  கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
~

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சம் இதில் நடித்தவர்களின் நடிப்பு. எந்தவொரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது அண்டர்பிளே செய்து லயானாக நடித்துள்ள ழான் ரெனேவும், 12 வயது அடலஸொண்ட்  பெண் மெட்டில்டாவாக நடித்துள்ள நதாலியா போர்த்மேனும் அருமையாக நடித்திருக்கின்றனர். ஆனாலும் தனது அட்டகாசமான உடல் மொழிகளினாலும், முகபாவனைகளினாலும் பிரமாதப்படுத்தியள்ளார் ஸ்டேன்ஸ்ஃபோர்டாக நடித்துள்ள  கேரி ஓல்ட்மேன்.
~

மொத்ததில் Leon the Professional மனித மன உணர்வுகளை முன்னிறுத்தும், கனமான கதையுடன் கூடிய தரமான முழுமையான ஆக்‌ஷன் படம். 
~

பிகு : அர்ஜுன் நடித்த சூரியப்பார்வை இப்படத்தின் தமிழ் ஜெராக்ஸ்.

Comments