கர்ணன் - ஒரு புதிரின் சரிதம்

கர்ணன் - ஒரு புதிரின் சரிதம் 
 

கர்ணனை கொடைவள்ளலாகவும், ஹீரோவாகவும் பார்க்கத் துவங்கியது மிகவும் பிற்காலத்தில் தானா ? மகாபாரதத்தில் காணப்படும் கர்ணன் யார் 

உண்மையில் ஹீரோவா ? இல்லை வில்லனா ? 
 
சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. 
 ~
 
கர்ணனின் பிறப்பு, வளர்ப்பு போன்றவை பெரும்பாலும் எல்லோரும் அறிந்ததே. அதை ஸ்கிப் செய்து விடலாம். நேரடியாக சப்ஜெக்டுக்குள் சென்றுவிடலாம்.
 ~
 
ராதா - அதிரதனால் வளர்க்கப்பட்ட கர்ணன் ஆசாரியர் துரோணரிடம் போர்க்கலையை  கற்க துவங்கினான். கவனிக்க, ஏகலைவனை நிராகரித்த ஆச்சாரியார் கர்ணனுக்கு வித்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்.  
 
பின்னர், மேற்படிப்புக்காக ஜமதக்னியின் மைந்தன் பரசுராமரிடம் கர்ணன் சீடனானான்.  தனது வம்ச வரிசையை  (lineage) மறைத்து பொய் சொல்லி வித்தை கற்றுக் கொண்ட கர்ணனுக்கு வாழ்வின் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் கற்ற வித்தைகள் மறந்து போகும் என்ற குருவின்  சாபமும் கிடைக்கிறது. 
 
பரசுராமர் பிதாமகர் பீஷ்மருக்கே குருவாக இருந்து போர்த்தொழில் கற்றுக் கொடுத்தவர். க்ஷத்ரியர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்று புறப்பட்டாரே தவிர, சத்ரியர்களுக்கு போர்த்தொழில் கற்றுக் கொடுக்க மாட்டேன் என்று அவர் பிரதிஞ்ஞை ஏதும் எடுத்திருக்கவில்லை. அவரிடம் கர்ணன் உண்மையை சொல்லியிருக்கலாம்.
 
ஆனால்,கர்ணன் பொய் சொன்னான்.
 
 
குருவின் இந்த சாபம் தான் கர்ணனின் வாழ்வை முடித்து வைப்பதில் பிரதானமான ஒரு காரணியாக இருந்தது.
 ~
 
இந்திரனின் மகன் அர்ஜுனன் மீதான கர்ணனின் பொறாமை அபரிமிதமானது. அர்ஜுனனை போட்டிக்கு அழைப்பதை எப்போதுமே ஒரு வழக்கமாக கர்ணன் கொண்டிருந்தான்.
 
பாண்டவர்களின் மீதும், குறிப்பாக அர்ஜுனன் மீதும் பகைமை பாராட்டும் கர்ணனை நண்பனாக அடைய விழைந்த துரியோதனன் அங்க நாட்டுக்கு அரசனாக அவனுக்கு பட்டாபிஷேகம் செய்வித்தான்.
 
துரியோதனின் அத்யந்த நண்பனாக மாறிய கர்ணன் பாண்டவர்களை இழிவுபடுத்துவதிலும், துன்புறுத்துவதிலும் அவனுக்கு தோள் கொடுத்து நின்றான்.
 ~
 
உண்மையிலேயே மகாபாரதத்தின் போக்கில் துரியோதனுக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய வில்லனாக கர்ணனே சுட்டப்படுகிரான்.  ஆனால் பின்னர் எழுதப்பட்ட வியாக்கியானங்களிலும், வாய்மொழி கதா உரையாடல்களின் மூலமும் கர்ணன் மகாபாரதத்தின் மாபெரும் ஹீரோ ஆக்கப்பட்டான்.
 ~

நாகரீகமான எதிர்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. 


Comments