ஃபிளாஷ்பேக் - மன்னார்குடி டேஸ்


MANNARGUDI DAYS

~
பழைய நினைவுகள் அலையடிக்கின்றன. 

ஹரித்ராநதி தென்கரையில் இருந்து வடகரைக்கு நீந்தி மீண்டும் தென்கரைக்கு திரும்புவோம். 

நடுவில் போகும்போதும், திரும்ப வரும்போதும் மைய மண்டபத்தில் சிறிது நேரம் ஓய்வு. கரித்துண்டுகளால் எங்கள் பெயரை பலமுறை மைய மண்டபத்தில் உள்ள கோவில் சுவர்களில் பதிவு செய்துள்ளோம். எத்தனாவது முறை என்றும் குறிப்பிட்டிருப்போம். 

குளிக்கப் போனால் வீட்டில் இருந்து தேடி வரும்வரை குளித்துக் கொண்டே இருப்போம். 
~
நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் மாமனார் இறந்தபோது காரியம் முடித்துவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் மிலிட்டரி ரிடர்ன் பாபு மாமாவோடு  கொஞ்ச  நேரம்  நீச்சல் அடித்தேன். 

உடன் வந்தவர்கள் காரியம் முடிந்த பின்னர் முழுக்கு போட்டுவிட்டு நேரே வீடு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியதால் பாதியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஹரித்ராநதி எங்கள் வாழ்க்கையின் அங்கம்.
~

😍

Comments