இசை - நந்தா என் நிலா - தெட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்
இசை - நந்தா என் நிலா
தெட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்
இவ்வளவு நீளமான பல்லவியுடன் தமிழில் வேறு பாடல்கள் கேட்டதாக நினைவில்லை!
~
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா - விழி
மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில்
நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையில்
மோகனக் கலையே
வண்ண வண்ண மொழியில்
வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா
~
அப்ப்பா.....
இத்தனை பெரிய பல்லவியுடன் தொடங்கும் பாடலின் சரணம் வெறும் நான்கு வரிகளில் மட்டுமே அமைந்திருப்பது இன்னுமொரு ஆச்சரியம்.
"ஆயிரம் மின்னல் ஓருருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே"
அவ்வளவுதான்.....
மறுபடியும் அந்த நீண்ட பல்லவி.
பிரமிக்க வைக்கும் வித்தியாசமான முயற்சி.
~
இந்த பாடல் இடம் பெற்ற படம் "நந்தா என் நிலா". பாடலை எழுதியவர் இரா. பழனிச்சாமி. இவ்வளவு கவித்துவமான வரிகளைக்கொண்ட பாடலை எழுதிவிட்டு அதன் பின்னர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.
~
பாடலுக்கு இசையமைத்தவர் தெக்ஷிணாமூர்த்தி. " ஸ்வாமி" என்று மலையாளப்படவுலகில் அன்புடன் அழைக்கப்பட்டவர். ரொம்ப சீனியர். ஜீனியஸ். தமிழில் ஓரிரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். "ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது" அவற்றில் ஒன்று. இன்ஸிடெண்ட்டலி இந்த இரண்டு படங்களுமே புஷ்பா தங்கதுரை எழுதிய கதைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.
~
மதுவந்தி ராகத்தில் அமைந்த "நந்தா நீ என் நிலா" பாடலை SPB பாடியிருக்கிறார். பிரம்ம ராக்ஷசன். குரலா அது.. எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகிறது நம் மனதை.
~
மதுவந்தி ராகத்தில் இளையராஜாவும் சில பாடல்கள் வழங்கியிருக்கிறார். ரமணா படத்தில் வரும் "வானவில்லே.." அவைகளில் ஒன்று.
யுவன் இசையில் 7G ரெயின்போ காலனி படத்தில் "கனாக்காணும் காலங்கள்.." கூட மதுவந்தி தான்.
~
இளையராஜா தெக்ஷிணாமூர்த்தி ஸ்வாமியை குரு நாதர் என்று போற்றியிருக்கிறார்.
~
🙏


Comments
Post a Comment