வரலாறு - மாவீரன் ?
வரலாறு
திப்பு மாவீரனா ?
திப்புசுல்தான் நிகழ்த்திய அட்டூழியங்கள்....
நண்பர் ஸ்ரீராம் கண்ணனின் விவரங்களுடன் எனது பார்வை.
சுடுகாடாக மாறிய கோழிக்கோடு.
எலம்குளம் குஞ்சன்பிள்ளை மாத்ருபூமி இதழில் 25- 12- 1955ல் எழுதினார்.
" ஹிந்துக்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். நாயர்கள், சமர்கள், நம்பூதிரிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது "
ஜெர்மானிய மிஷிநரி கண்டெஸ்ட் எழுதினார்
" 1788ல், தப்புசுல்தானின் 60000 பேர் கொண்ட படை கோழிக்கோட்டை தரை மட்டமாக்கியது. அவர்கள் புரிந்த அட்டகாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை "
சி.ஏ.பர்குர்ஸ்ட் என்பவரும் கோழிக்கோடு தரைமட்டமாக அழிக்கப்பட்டதை கூறுகிறார்.
மேலும் மலபாரில் திப்புசுல்தான் நிகழ்த்திய மதவெறியாட்டங்கள் பற்றி K.V. Krishna Iyer எழுதிய Zamorins of calicutஎன்ற புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை உலகம் கண்டிராத மதவெறி அட்டூழியங்களை திப்புசுல்தான் நிகழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் திப்புசுல்தான் நிகழ்த்திய கோயில் இடிப்புகளை வில்லியம் லோஹன் எழுதிய Malabar manual என்னும் ஆவணம் விரிவாக விளக்குகிறது.
அதுபோலவே வடக்கனூர் ராஜா ரவிவர்மா எழுதிய History of Sanskrit literature in Kerala என்னும் புத்தகமும் இடிக்கப்பட்ட கோயில்கள் பற்றி கூறுகிறது.
திப்புசுல்தானின் மதவெறிக்கு உதாரணமாக, அவன் பல ஊர்களின் பெயரை மாற்றினான்.
பின்னர் அவன் இறந்தவுடன் மக்கள் அந்தப் பெயரை தூக்கி எறிந்தனர்.
உதாரணமாக.
திண்டுக்கல் - ஹாலிகாபாத்.
மங்களூர் - ஜலாலாபாத்.
கண்ணனூர் - குஷானாபாத்.
பேபூர் - சுல்தானாபட்னம்.
மைசூர் - நசராபாத்.
தர்வா- குர்சித் சவத்.
குட்டி - பைசஜ் ஹசர்.
ரத்னகிரி - முஸ்தபாபாத்.
கோழிக்கோடு - இஸ்லாமாபாத்.
திப்பு சுல்தான் என்பது மலபார், (கொங்கண், கூர்க் மற்றும் மைசூர்) வரலாற்றில் வெறுக்கத்தக்க நபரின் பெயர்.
(இதை எனது கூர்க் பயணத்தில் நேரடியாக கண்டேன்.)
எனவே தான் அந்த பெயர் தாங்கி மேற்கு கடற்கரை ஓரமாக, மைசூர் வரை யாரும் இல்லை.
திப்பு சுல்தான் நடத்திய மதவெறி ஆட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கேரளாவும் கூர்க்கும்.
ஆனால் அவனை பெரிய போராளி ஆகவும், மதங்களை சமமாக மதித்தவன் என்று இடதுசாரி, இஸ்லாமிய எழுத்தாளர்கள் கதை எழுதி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
சிருங்கேரி மடத்துக்கு திப்பு ஆற்றிய உதவிகள் பற்றி உதாரணங்கள் கூறுவார்கள். அது எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் அடிப்படையில் அமைந்தது. மராட்டியர்களுக்கும் சிருங்கேரிக்கும் ஆகவே ஆகாது என்பது வரலாற்று உண்மை.
அதை சரி செய்ய வேண்டிய தேவையும் கடமையும் நமக்குள்ளது.
~


Comments
Post a Comment