லைப்ரரி - புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
நூலகம்
~
'புயலிலே ஒரு தோணி' - ப. சிங்காரம்
'கடலுக்கு அப்பால்' நாவல் படித்து முடித்த கையுடன் 'புயலிலே ஒரு தோணி' படிக்க துவங்கினேன். கிட்டத்தட்ட அந்நாவலை ஒட்டிய கதையாகவே இதுவும் இருக்கிறது. அதில் வந்த கதைமாந்தர் இதிலும் அங்கங்கே தென்படுகின்றனர். விடுதலைக்கு முந்தைய செட்டி நாட்டு பகுதிகளையும், பிழைப்புக்காக மலேசியா, பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த அவர்களின் துயர் நிறைந்த வாழ்வையும் இரண்டாம் உலக போரின் கோர தாண்டவத்தையும் அதனால் தொலைந்த மனிதர்களையும், சிதைந்த வாழ்வையும் அற்புதமாக படம் பிடித்துள்ளார் சிங்காரம்.
தமிழில் இதுவரை வெளிவந்த நாவல்களில் குறிப்பிடத்தக்க இடத்தை இந்த இரு நாவல்களுக்கும் கண்டிப்பாக வழங்கலாம்.
ஆச்சரியமான ஒரு விஷயம் நூலாசிரியர் ப. சிங்காரம் இதுவரை இந்த இரண்டு நாவல்களை மட்டுமே எழுதியிருக்கிறார்.
சிங்கம் சிங்கிளாத் தானே வரும்...!
~


Comments
Post a Comment