லைப்ரரி - இலங்கை-பிளந்து கிடக்கும் தீவு - கே.ஜி. ஜவர்லால்
லைப்ரரி
இலங்கை - பிளந்து கிடக்கும் தீவு
(கே.ஜி. ஜவர்லால்)
கிழக்கு பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட திரு கே.ஜி. ஜவர்லால் அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பில் சமந்த் சுப்பிரமணியன் எழுதிய "இலங்கை - பிளந்து கிடக்கும் தீவு" புத்தகம் படித்து முடித்தேன்.
இலங்கை இனப்பிரச்சினையின் மகாவம்ச கால துவக்கம் தொட்டு 2009 முள்ளிவாய்க்கால் துயரம் வரையிலான நிகழ்வுகளை கோர்த்து வழங்கியிருக்கிறார் சமந்த். திரு. ஜவர்லால் அவர்களின் மொழிபெயர்ப்பு அருமையாக உள்ளது.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இயங்கிய புலிகள் தவிர்த்த பிற போராளி குழுக்களையும், அவைகளின் முக்கியமான தலைவர்களைப் பற்றியும் இன்னும் சற்று விரிவாக எழுதியிருந்தால் வரலாற்றின் இன்னொரு பக்கத்தை இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் எனக் கருதுகிறேன்.
எழுபதுகளில் தோன்றிய ஜே.வி.பி. பற்றி எழுதும்போது மார்க்சிய இயக்கம் என்று அதன் பெயரை குறிப்பிடாமல் எழுதியது ஏன் என்று தெரியவில்லை. எழுபதுகளில் ஜே.வி.பி.யின் புரட்சிகர நடவடிக்கைகளையும், ஆயிரக்கணக்கான சிங்களர்களை அப்போது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி கும்பல் கும்பலாக இலங்கை அரசு கொன்று குவித்த சரித்திரத்தையும் கூட எழுதியிருக்கலாம்.
~


Comments
Post a Comment