அஞ்சலி - கட்டுடைத்த பீடாதிபதி - ஸ்ரீஜெயேந்திரர்
நினைவஞ்சலி
ஸ்ரீஜெயேந்திரர்
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஆசாரத்துடன் இருந்த காஞ்சி மட வாசலை அனைவருக்கும் அகல திறந்து வைத்தார். திருக்குலத்தார் வாழ்விடங்களுக்கு காஞ்சி மடத்தை எடுத்துச் சென்றது எந்த ஒரு ஆச்சாரியாரும் செய்ய துணியாத ஒரு செயல்.
ஆன்மிகத்தை சமூக நல்லிணக்கத்துடன் இணைக்கவேண்டி அயோத்தி பிரச்சினைக்கு தீர்வை எட்ட முயன்றார்.
ஜன் கல்யான் ஜன் ஜாக்ரான் அமைப்புகள் உருவாக்கி சமூக நல்வாழ்வு திட்டங்களை அனைத்து மக்களிடமும் எடுத்துச் சென்றார். அவரின் செயல்பாடுகள் பிராமண சமுதாயத்தினரிடையே கசப்பை ஏற்படுத்தியும் அவர் எதிலிருந்தும் பின் வாங்கவில்லை.
அவரின் ஓவர் எந்துஸியாஸம் தான் அவரை சறுக்கியும் விட்டது. அவரின் எதிரிகள் இதற்காகவே காத்திருந்தனர். அவர்கள் மகிழ்வடையும் வண்ணம் சூழ்நிலைகள் அவரின் எதிரியாயின.
அவரின் பிற்கால வாழ்வு பரிதாபகரமானது. மிகவும் வேதனையானது.
ஒரு மடாதிபதியாக ஆன்மிகத்துடன் சமூக மேம்பாட்டையும் இணைத்து எடுத்துச் சென்ற அவரின் பாதையை இனி வரும் ஆச்சாரியார்கள் தொடருவார்களா என்பது ஐயமே.
காஞ்சி மடம் ஸ்மார்த்த பிராமணர்களின் ஆச்சார வளையத்தில் இனி மீண்டும் சுருங்கி அவர்களுக்கு மட்டுமேயான மடமாக மாறிவிடுமோ ?
அவருக்கு முன்னர் அது அப்படித் தான் இருந்தது.
~
ஒம் சாந்தி


Comments
Post a Comment