லைப்ரரி - புருஷவதம் - பாலகுமாரன்
லைப்ரரி
புருஷவதம் - பாலகுமாரன்
பழையனூர் நீலிக் கதையை பல வடிவங்களில் கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன்.
கூகுள் குரூப்ஸ், ஆர்குட் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பலவாறான பழையனூர் நீலிக் கதைகள் சைவ, சமண, பவுத்த பின்புலத்தில் உலவியிருக்கின்றன. நிறைய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
சுஜாதா தனது கரையெல்லாம் செண்பகப்பூவில் இக்கதையை திருநெல்வேலி பின்னணியில் சிறிய அளவில் கூறியிருக்கிறார்.
ஜெயமோகன் நாஞ்சில் நாட்டுப் பின்னணியில் இக்கதையை தனது வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஆனாலும், தொண்டை மண்டல பின்புலத்தில் திருவாலங்காடு திருத்தலத்தினை இணைத்து பாலகுமாரன் எழுதியுள்ள பழையனூர் நீலிக் கதையான "புருஷவதம்" தான் இதுவரைப் படித்ததிலேயே பெஸ்ட்.
பழையனூர் நீலிக் கதை சர்வ நிச்சயமாக நடைபெற்றிருக்கக்கூடிய இடம் திருவாலங்காடாகத் தான் இருக்கமுடியும் என்று கண்டிப்பாக நம்புகிறேன்.
வாக்கு தவறியமைக்காக ஒட்டுமொத்த கிராமத்தின் 64 வேளாள ஆண்களும் தீமூட்டி அதில் குதித்து உயிர் தியாகம் செய்த வரலாறு பாலகுமாரனின் எழுத்தில் மனதை உறைய வைக்கும்
மெர்க்குரிப் பூக்கள் பாலகுமாரனுக்கும் இந்த பாலகுமாரனுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.
நிச்சயமாக இவர் #எழுத்து #சித்தர் தான்.
இவரின் நடை படிப்பவர்களை மயக்கும் மாயநடை.
#RIP #Balakumaran
PC: Jeeva Nanthan sir.


Comments
Post a Comment