அஞ்சலி - ஜீனோ என்ற ஜீனியஸ்

அஞ்சலி

ஜீனோ என்ற ஜீனியஸ்



~
ஒரு வாரமாக கொஞசம் கொஞ்சமாக உடல்நிலை மோசமடைந்து வந்தது. இரு நாட்களாக பெரும்பாலும் சுயநினைவு இல்லை. வீட்டில் அனைவர் முகத்திலும் சோகம். எந்த வேலையும் ஒழுங்காக பார்க்க முடியவில்லை. மனதெல்லாம் பாரம்.
~

டாக்டருக்கு போன் செய்தேன்.

"கண்டிஷன் க்ரிட்டிகல் தான். ஆறு மணிக்கு நான் ஒருவரை அனுப்புகிறேன். மாமியிடம் சொல்லாதீங்க. ஒரே ஒரு ஊசி. அதற்கும் கஷ்டமில்லாமல் உங்களுக்கும் அது படும் கஷ்டத்தை பார்க்கவேண்டிய துயரம் இல்லாமல்.... அஞ்சு நிமிஷத்தில் முடிந்துவிடும் என்றார்."

ஆண்டவா இது என்ன சோதனை..
~

ஆபிஸில் இருந்து அவசர அவசரமாக திரும்பி, வரும் வழியில் ஒரு செகண்ட் மயிலாப்பூர் சாயிபாபா கோவிலில் ஒரு சின்ன பிரார்த்தனை.... அவனை சிரமமின்றி உன்னிடம் அழைத்துக் கொண்டுவிடு.

நந்தனம் தேவர் சிலை வரும்போது மனைவியிடமிருந்து போன்...

அழுதுகொண்டே "ஜீனோ போயிட்டான்... இப்பத்தான்."

டாக்டருக்கு அவன் வேலை வைக்கவில்லை.
~

12 ஆண்டுகள் இரண்டு மகன்களுடன் மூன்றாவது மகனாக வளர்ந்தவன். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் எங்களுடன் கூடவே இருந்தவன். எங்களுக்கு மட்டுமின்றி எங்கள் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் செல்லம். என் இனிய இயந்திரா ஜீனோ போலவே மகா புத்திசாலி....

இன்று எங்களுடன் இல்லை. இறைவனுடன் ஐக்கியமாகி விட்டான்.

ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

Comments