அஞ்சலி - கோ.சி. மணி - களைப்பறியா உழைப்பாளி

அஞ்சலி

கோ.சி. மணி


இன்று முன்னாள் அமைச்சர் திரு. கோ.சி. மணி அவர்களின் நினைவு நாள்.

அவர் மறைந்தவுடன் எழுதிய நினைவு பதிவு.
~

கும்பகோணம் இன்று இவ்வளவு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு மாடர்ன்  நகராக மாறியதற்கும் மாநகராட்சியாக மாறுவதற்கான தகுதிகளைப் பெற்று வரிசையில் முதன்மையாக நின்று கொண்டிருப்பதற்கும் முழுக்காரணம் அவர் தான்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள மற்ற ஊர்மக்கள் நம்ம ஊருக்கு இப்படி ஒரு அமைச்சர் இல்லையே என்று வருந்தியதை நான் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன்.

உள்ளாட்சி அமைச்சர் ஆனவுடன் ஆக்கிரமிப்பாளர்களின் அசுரப்பிடியில் இருந்து குடந்தை நகரை முதலில் மீட்டார். தன் கட்சிக்கார ஆக்கிரமிப்பாளர்களைக் கூட அவர் விடவில்லை. 

இரண்டுமுறை பைபாஸ் செய்த உடலோடு கடும் மழைக்காலங்களில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவர் களத்தில் இறங்கி அதிகாரிகளை பெண்டு நிமிர்த்தியதை கண்ணால் கண்டிருக்கிறேன். 

அவர் நல்ல அரசியல்வாதியா என்பதற்குள் நுழைய நான் விரும்பவில்லை. நல்ல அட்மினிஸ்டிரேட்டர்.  

அவர் அமைச்சராக இருந்த காலத்தில் சலியாது உழைத்தார். தனிப்பட்ட வாழ்வில் அடுக்கடுக்காக சோதனைகள் வந்தபோதும் அவர் மக்களுக்காக உழைப்பதில் சுணக்கம் காட்டவேயில்லை. 

கும்பகோணம் நகர் மக்களுக்கு மாபெரும் இழப்பு அவரின் மரணம். கும்பகோணத்தில் ஒரு ஏழெட்டு வருடங்கள் வசித்தவன் என்ற முறையில் எனது ஆழ்ந்த இரங்கல்கள். 

முன்னாள் அமைச்சர் திரு கோ சி மணி அவர்களின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்.


Comments