அஞ்சலி - சோ என்னும் தீர்க்கதரிசி
அஞ்சலி
மாணவப் பருவம் முதல் துக்ளக் வாசகன் நான்.
~
எண்பதுகளில் தமிழீழத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் நான் ஆதரித்தபோது அதை கடுமையாக எதிர்த்து வந்தார் சோ. அவர் மீது எனக்கு கோபம் ஏற்பட்டது. ஆனாலும் துக்ளக் தொடர்ந்து படித்து வந்தேன். அவர் ஆயுதக் கலாச்சாரத்தால் என்ன நிகழக்கூடும் என்று எச்சரித்தாரோ அது நிகழ்ந்தது.
என்னைப் போன்றோர் அதிர்ந்தோம்.
~
பின்னர் 90 களின் இறுதியில் தமிழக அரசியலில் அவர் எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும் அந்த நேரத்தின் சரியான முடிவு அது. அப்போது அவரை ஆதரித்தேன். நான் கும்பகோணத்தில் இருந்தபோது பாபநாசம் தொகுதியில் தமாக வுக்காக பிரச்சாரம் செய்தேன்.
~
2000 க்கு பின் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் அவரின் ஒற்றைப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாலும் முடிவு என்னவோ அவரின் கணிப்புப் படியே அமைந்தது.
~
சென்னையில் இருக்கும்போதெல்லாம் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு கண்டிப்பாக நான் சென்று வருவேன்.
~
என்னுடைய அதிகாரியாய் இருந்து ஓய்வுபெற்ற, திராவிட இயக்கத்தின் பாற் தீவிர பற்றுள்ள மரியாதைக்குரிய கூடுதல் பதிவாளர் திரு பாண்டியன் அவர்கள் வாரம் தவறாமல் துக்ளக் வாசிக்கும் பழக்கம் உள்ளவர். அவரிடம் இதைப் பற்றி கேட்டிருக்கிறேன். "நாங்கள் எங்கு சறுக்குகிறோம் என்பதை சோ மூலம் தான் தெரிந்து கொள்ளமுடியும். அதற்காகத் தான் விடாமல் படிக்கிறேன்" என்பார்.
எதிர்க் கருத்துள்ளவர்களையும் தனது எழுத்துகள் மூலம் ஈர்த்தவர் சோ.
~
துக்ளக் கில் வாசகர் வி ஐ பி மீட்டில் எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தவர்.
~
நாடகம், சினிமா, சட்டப்பணிகள், இதழியல், சமய சிந்தனைகள், கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் பிரமுகர்களிடமும் நட்பு பாராட்டல் என்னும் பன்முக திறன் பெற்ற ஒரு மல்டி ஃபேஸட்டட் பெர்ஸனாலிடி அவர்.
~
அவர் மறைந்துவிட்டார். 😭
Rest of India உடனான தமிழகத்தின் ஒரு முக்கியமான சேனல் அடைபட்டுவிட்டது.
~
ஒரு மாபெரும் இழப்பு.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.
~
😭


Comments
Post a Comment