இசை - காதோடு தான் நான் பாடுவேன்

இசை

Gobinath Nada வின் ஸ்டேடஸ் சும் என்னுடைய காமெண்ட்டும் : 

Gopinath :

"ஆரம்பம் இன்றே ஆகட்டும்" 
---   காவியத்தலைவி

எனது MP3 பாடல்களில் 'OLD IS GOLD- Gemini Ganeshan' என்ற கோப்பிற்குள் இந்தப் பாடல் இருந்தது. பெண் குரல் பாடகியின் கணீர் ஒலிப்பும் தனது விற்பன்னத்தைக் காட்டும் வகையாக நுட்பமான இடங்களில் புகுந்து விளையாடும் தன்மையும் நான் இதுவரை வேறு பெண் பாடகிகளிடம் கண்டிராதது. கண்ணை மூடி சில நொடிகள் யோசித்தால் ஜீன்ஸ் படத்தில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் பாடிய நித்யஸ்ரீ மகாதேவனின் அந்தப் பாடல் மட்டும் வந்து செல்கின்றது. இருந்தாலும் LR ஈஸ்வரிக்கு கிட்ட வரவில்லை. உரத்த குரலில் பாடும் வளம் கொண்டமைந்திருக்கிறார். 

Kalisudhan Sakthi Bala Ksb please throw out your views on this. 

ஆணின் அந்தரங்கமான கேள்விக்கு பெண் பதிலளிக்கும் போது கொண்டிருக்கக்கூடிய மழுப்பல் தன்மையை தனது நளினமான குரலசைவுகளினூடாக பாடலிசையின் நுட்பங்களினூடு எடுத்துச் செல்லும் நிறைவை இன்னுமொரு பாடகி செய்திருக்கிறாரா? (நேத்து ராத்திரி யம்மா.. போன்ற பாடல்களில் 'ஹ ஹா ஹா....ஆ .. ' என்று சத்தங்கள் ஏற்படுத்துவதை நான் பல இடங்களில் கேட்டிருக்கிறேன்.)
~

என்னுடைய பதில் கமெண்ட் :

வணக்கம் திரு கோபிநாத். 

காவியத்தலைவியில் இடம்பெற்றுள்ள நீங்கள் குறிப்பிட்ட அந்த பாடல் மிகவும் அற்புதமானது. 

ஆரம்ப கால பாலசுப்ரமணியனின் இளமை பொங்கி வழியும் குரல். ஈஸ்வரி அவர்களின் அனாயசமான ஸ்ருங்கார நிரவல்கள். Really Romantic.

இது போன்று மேலும் சில பாடல்கள் கூட நினைவுக்கு வருகிறது. 

- யார் நீ படத்தில் இடம்பெற்ற "பார்வை ஒன்றே போதுமே .."

- வெள்ளி விழா படத்தில் "காதோடு தான் நான் பாடுவேன் .."

- அத்தையா மாமியா படத்தில் "மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு ..."

- எதிர்காலம் படத்தில் "மௌனம் தான் பேசியதோ.."

~~~~~

 ||ஆணின் அந்தரங்கமான கேள்விக்கு பெண் பதிலளிக்கும் போது கொண்டிருக்கக்கூடிய மழுப்பல் தன்மையை தனது நளினமான குரலசைவுகளினூடாக பாடலிசையின் நுட்பங்களினூடு எடுத்துச் செல்லும் நிறைவை இன்னுமொரு பாடகி செய்திருக்கிறாரா? || ----->> 

நிச்சயமாக இல்லை என்று தான் தோன்றுகிறது.

யேசுதாசும் சுசிலாவும் "மதன மாளிகை" படத்தில் பாடியுள்ள "ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா " பாடல் ஓரளவு அந்த தரத்தில் அமைந்திருந்தாலும் சுசிலாவின் குரலில் சிருங்கார ரசம் சற்றுக் குறைவு தான். 

"மூன்றாம் பிறை" படத்தில் "பொன்மேனி உருகுதே.." பாடல் கூட உச்சஸ்தாயியில் perfection இல்லாதது போல் தான் நான் உணர்கிறேன்.
~~~~~

மற்றபடி நித்தியஸ்ரீ அவர்களிடம் உச்சஸ்தாயியில் அசாத்தியமாக உலாவும் திறன் இருந்தும் குழைவும், சிருங்கார ரசக் குறைவும் அவரை திரை இசையில் பெரிய அளவில் இட்டுச் செல்லவில்லை என்றே உணர்கிறேன்.

ஈஸ்வரியின் திறமையை இளையராஜா சரிவர பயன்படுத்திக் கொள்ளாதது கண்டிப்பாக ஒரு சோகம் தான்.
~

☹️

Comments