இசை - நம்மவர் மகேஷ் மஹாதேவன்.
இசை
நம்மவர் மகேஷ் மஹாதேவன்.
நம்மவர் மகேஷ் என்றால் பெரும்பாலோருக்கு தெரியும்.
நம்மவர் படம் box-office இல் சரியாக போகவில்லை. ஆனாலும் திரை விமர்சகர்களால் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பாராட்டைப் பெற்றது. தேசிய விருதும் பெற்றது.
கல்லூரிப் பேராசிரியரான கமல் ஒரு கேன்சர் நோயாளி. தனது சொல்லாலும் செயலாலும் நேர்மறை சிந்தனைகளாலும் மாணவர்களிடையே பலமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். மோசமான கல்லூரியை நல்ல கல்லூரியாக மாற்றுகிறார்.
இந்த ரோலுக்கு இன்ஸ்பிரேஷன் மகேஷ்.
~
இனி மகேஷ் ஐப் பற்றி :
ஜாம்ஷெட்பூர் XLRI ல் MBA படித்தவர். India Piston உட்பட பல பெரிய நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர். Real Image Media Technologies என்ற நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிதி ஆலோசகராக இருந்தவர்.
ஆனாலும் குழந்தை பருவம் முதலே இசையின் மீது தீரா காதல் உடையவர்.
தலைக்கு மேல் கிடாரை தூக்கி பிடித்து "ரகுபதி ராகவ ராஜா ராம்.." பாடலை வாசித்துக் காட்டியவர்.
250 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு (Jingles) இசை அமைத்தவர். அதில் பிரபலமான ஒன்று
"சொட்டு நீலம் டோய்... ரீகல் சொட்டு நீலம் டோய்.."
~
திரைத் துறையில் நுழையும் தறுவாயில் கேன்சர் இவரைத் தாக்கியது.
கலங்கவில்லை. நேர்மறை சிந்தனையுடன் புற்று நோயை எதிர்கொண்டார்.
Live-Beyond Cancer என்னும் அமைப்பின் மூலம் புற்று நோய் பாதித்தவர்களுக்கு வாழ்க்கையை positive ஆக வாழ councilling வழங்கினார்.
நம்மவர் படத்துக்கு இசை அமைக்க கமல் இவரை அழைத்தார். முதல் படமே தேசிய விருது பெற்ற படம் ஆக அமைந்தது. இப்படத்திற்காக Juries' Special Mention பெற்றார்.
குருதிப்புனல்,
ஆளவந்தான்,
வானம் வசப்படும்
கனவு மெய்ப்பட வேண்டும்
உள்ளிட்ட ஆறு படங்களுக்கு புற்று நோயுடனேயே இசை அமைத்தார்.
பாடகர் ஸ்ரீனிவாஸ் க்கு அறிமுகம் கொடுத்தவர் இவர் தான்.
~
தனக்கு வழங்கப்பட்ட வாழ்வை அனுபவித்து கொண்டாடி வாழ்ந்தவர், மகிழ்ச்சியுடன் இறுதிப் பயணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டவர், 2002 ம் ஆண்டு புற்று நோய் அரக்கனிடம் போராடி வீழ்ந்தார்.
Live - Beyond Cancer எனும் இவரின் முழக்கம் நம்பிக்கை ஒலியாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஒலித்துக் கொண்டிருக்கிறது இன்றும்.
Mahesh Memorial Trust அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உற்ற நண்பனாக உதவிக் கொண்டிருக்கிறது. கமல், மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் சேர்ந்து உருவாக்கி நிர்வகிக்கும் டிரஸ்ட் இது.
~
திறமையான நல்லவர்களை நெடுநாள் வாழ விடாத உன் கொள்கையை என்று மாற்றுவாய் இறைவா..?
மண்ணை விட்டு மறைந்தாலும் இசையால் மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
~
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்......
குழந்தையின் அழுகுரல் நல்ல சங்கீதம்..
நம்மவர்
~
பி.கு.:
வானம் வசப்படும் படத்தில் இடம்பெற்ற "வானம் உயரம்" பாடலின் prelude தான் என் செல்பேசியின் ரிங்டோன்.


Comments
Post a Comment